கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணிகளையும், கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த மார்க்கெட்டில் பணிகளையும் அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமித்ஷாவின் சென்னை வருகையின் போது ஏற்பட்ட மின்வெட்டு தற்செயலானது என்றும், துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு உடனடியாக சரி செய்யப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.