அரசாங்கத்தின் கிராமத்துடனான கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் உபகரணங்கள் விநியோகம்

அரசாங்கத்தின் கிராமத்தினுடனான கலந்துரையாடல் 2020/2021 காலப்பகுதிக்கான வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தமது தொழிலை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் இன்று(12) இடம்பெற்றன.

கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சிபாரிசிற்கு இணங்க மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இவ்வேலைத்திட்டத்திற்கு இணங்க, பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 46 பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சபேசன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 37 தோணிகளும், 8 நீர்ப் பம்பிகள் மற்றும் விவசாய நீர்ப்பாசனத்திற்கான குழாய்கள், இராசயன தெளி கருவி ஒன்று ஆகியன பயனாளிகளிடம் பகிர்ந்தளிக்கப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.