Robo Shankar:எல்லோருக்கும் வர வியாதி தான் எனக்கும் வந்து உருக்கிடுச்சு: ரோபோ சங்கர்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ரோபோ சங்கர் என்றாலே ஆள் நல்லா வெயிட்டாக இருப்பார். இந்நிலையில் அவர் எடை குறைந்து எலும்பும் தோலுமாக ஆனார். ரோபோ சங்கரை பூசினாற் போன்றே பார்த்த ரசிகர்கள் அவர் ஒல்லிக்குச்சியாக மாறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள்.

சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்கிறேன்
நல்லா இருந்த ரோபோ சங்கருக்கு என்ன பிரச்சனை. இப்படி அநியாயத்துக்கு ஒல்லியாகிவிட்டாரே. அவரை பார்க்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. நடக்கக் கூட தெம்பு இல்லாதது போன்று தெரிகிறார். எப்படி இருந்த மனுஷன் இப்படியாகிவிட்டாரே என ரசிகர்கள் வேதனையில் புலம்பினார்கள்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இத்தனை நாட்களாக அமைதியாக இருந்த ரோபோ சங்கர் தற்போது முதல் முறையாக உண்மையை சொல்லியிருக்கிறார்.

படத்திற்காக டயட்டில் இருந்து எடையை குறைத்தார் ரோபோ சங்கர் என முன்பு தகவல் வெளியானது. என்ன தான் படத்திற்காக எடையை குறைத்தாலும் இந்த அளவுக்கா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ரோபோ சங்கர் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்து எடையை குறைத்தது உண்மை தான். இதை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். டயட்டில் இருந்தபோது அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்திருக்கிறது. அதனால் தான் இப்படி எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார். மற்றபடி எந்த பிரச்சனையும் இல்லை. நான் திரும்பி வந்துவிட்டேன். புது தெம்புடன் இருக்கிறேன் என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார் ரோபோ சங்கர்.

எல்லோருக்கும் போன்று எனக்கும் ஒரு வியாதி வந்தது. அதன் பெயர் மஞ்சள் காமாலை என மேலும் தெரிவித்துள்ளார்.

மஞ்சள் காமாலைனு ஈஸியாக எடுத்துக்காதீங்க. அதுவும் சீரியஸான பிரச்சனை தான். உடம்பை பார்த்துக்கோங்க என்கிறார்கள் ரசிகர்கள்.

ரோபோ சங்கர் நலமாக இருக்கிறார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக எல்லாம் சில யூடியூப் சேனல்களில் செய்திகள் வெளியானது. அதை வீட்டில் சோபாவில் அமர்ந்தபடி பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்.

ரோபோ சங்கரை அடிக்கடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பார்க்கலாம். தன் செல்ல மகள் இந்திரஜாவுடன் சேர்ந்து சூப்பராக டான்ஸ் ஆடி வீடியோ வெளியிடுவார். தற்போதும் வீடியோ வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிகில் படம் புகழ் இந்திரஜா சங்கருக்கு திருமணம்: மாப்பிள்ளை வேறு யாருமில்ல…

இதற்கிடையே இந்திரஜாவுக்கும், அவரின் முறைமாமனான டாக்டர் கார்த்திக்கிற்கும் திருமணம் நடக்கவிருக்கிறது. அப்பாவை போன்றே மாமாவுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி ஏகப்பட்ட ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் இந்திரஜா.

இந்திரஜா, கார்த்திக் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி ஆகும். இந்நிலையில் தான் கார்த்திக்கை திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்களா என ரசிகர்கள் கேட்டதற்கு ஆம் என்று பதில் அளித்தார் இந்திரஜா.

தேதி நிச்சயமாகவில்லை. எல்லாம் முடிவானதும் கண்டிப்பாக அறிவிப்பு வெளியிடுகிறேன் என்றார். அவரின் பதிலை பார்த்த சிலரோ, ரோபோ சங்கரின் உடல்நிலை மோசமாகிவிட்டது. அதனால் தான் இந்திரஜாவுக்கு இப்பொழுதே திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்றெல்லாம் பேசினார்கள்.

இந்நிலையில் தனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்றும், நலமாகவும், ஹேப்பியாகவும் இருப்பதாகவும் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்திரஜாவின் திருமண தேதியை சொல்லுமாறு ரோபோ சங்கரிடம் ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.