இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். தமிழ் சினிமாவில் இவர் கொடுக்காத ஹிட்டே இல்லை. இருந்தாலும் கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சூர்யாவை ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.
பலர் இவரை ரோலக்ஸ் சார் என்று தான் அழைத்து வருகின்றனர். அந்த அளவிற்கு அந்த ரோலின் மூலம் ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றார் சூர்யா. இப்படத்திற்கு பிறகு சூர்யா நடித்து வரும் படங்களின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
Leo update: லியோ பாடலில் கெஸ்ட் அப்பியரன்ஸ்..மொத்தம் இத்தனை பிரபலங்களா? அடேங்கப்பா..!
அந்த வகையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகின்றார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மிகப்பிரமாண்டமான படமாக உருவாகி வரும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கின்றது. அதில் முதல் பாகம் அடுத்தாண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மீண்டும் இணையும் கூட்டணி
சூர்யாவின் திரைப்பயணத்திலே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் கங்குவா தானாம். இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு சூர்யா வெற்றிமாறனின் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெற்றிமாறன் விடுதலை இரண்டாம் பாகத்தில் பிசியாக இருப்பதால் வாடிவாசல் படத்தை துவங்க தாமதம் ஆகுமாம்.
எனவே இந்த காலகட்டத்திற்குள் ஒரு படத்தில் நடித்து முடித்துவிடலாம் என முடிவெடுத்துள்ளாராம் சூர்யா. இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா தன் 43 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்தை தானே தயாரிக்கவும் முடிவெடுத்துள்ளார் சூர்யா.
வாடிவாசல் தாமதம்
சூரரைப்போற்று படத்திற்கு பிறகு மீண்டும் இக்கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படம் பீரியட் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
ஆறு மாதத்திற்குள் இப்படத்தை சூர்யா முடித்துவிட திட்டம்போட்டுள்ளாராம். மேலும் இந்தாண்டு இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதை முடித்த பின்னர் சூர்யா வாடிவாசல் படத்தில் இணைவாராம். ஆனால் இந்த தகவல் எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.