ஐக்கிய அரபு அமீரகம் 2022-23-ல் ரூ.27,500 கோடி முதலீட்டுடன் இந்தியாவில் 4-வது இடம்

புதுடெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா கடந்த ஆண்டு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது. இதையடுத்து இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

2021-22 நிதி ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் 1 பில்லியன் டாலர் (ரூ.8,200 கோடி) முதலீடு செய்திருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டு வந்தது. இதையடுத்து 2022-23 நிதி ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதலீடு 3.35 பில்லியன் டாலராக (ரூ.27,500 கோடி) உயர்ந்துள்ளது. 2021-22 நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது மூன்று மடங்கு அதிகம் ஆகும்.

இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளின் வரிசையில் 2021-22 நிதி ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் 7-வது இடத்தில் இருந்தது. இந்நிலையில், தற்போது அது 4-வது இடத்துக்கு முன்னேறிஉள்ளது.

இந்தப் பட்டியலில் 17.2 பில்லியன் டாலர் (ரூ.1.41 லட்சம் கோடி) முதலீட்டைக் கொண்டு சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. 6.1 பில்லியன் டாலர் (ரூ.50,000 கோடி) முதலீட்டைக் கொண்டு மொரிஷியஸ் 2-வது இடத்திலும், 6 பில்லியன் டாலர் (ரூ.49,000 கோடி) முதலீட்டைக் கொண்டு அமெரிக்கா 3-வது இடத்திலும் உள்ளன.

சேவை, கடல்சார் போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளில் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துஉள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.