Meena: இரண்டு நாளில் திருமணத்தை வைத்துக்கொண்டு மீனா செய்த காரியம்: பிரபலம் பகிர்ந்த தகவல்.!

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகையாக திகழ்ந்தவர் மீனா. இவரை பிடிக்காதவர்கள் இல்லை என சொல்லலாம். அந்தளவிற்கு தனது குழந்தை தனமான சிரிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் மீனா. இவர் சினிமாவில் நுழைந்து நாற்பது ஆண்டுகள் நிறைவு செய்ததை மீனா 40 என்ற நிகழ்ச்சி மூலம் கொண்டாடப்பட்டது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். அப்போது மீனாவுடனான தங்களது திரை அனுபவத்தை பலரும் பகிர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய சேரன் நான் மீனாவுடன் சேர்ந்து நான்கு படங்களில் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். ‘பொற்காலம்’ படத்தில் நடித்தபோது திருவண்ணாமலையில் உள்ள கருவேலங்காட்டில் வைத்து அவரின் பிறந்தநாளை கொண்டாடியதை மீனா மறக்கவே மாட்டார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதே போல் ‘பொக்கிஷம்’ படம் எடுத்தபோது பத்ம ப்ரியாவுக்கு யாரை டப்பிங் பேச வைக்கலாம் என யோசித்து ஆடிஷன் வைத்தேன். ஆனால் யார் பேசியதும் எனக்கு திருப்தியாக இல்லை. படம் முழுக்க கடிதத்தை அழகான தமிழில் பேச வேண்டும். அந்த சமயத்தில் நடிகை மீனா என் நியாபத்தில் வந்தார். அவரிடம் கேட்கலாம் என நினைத்த போது தான் எனக்கு ஒரு தயக்கம்.

ஏனென்றால் இரண்டு நாட்களில் அவருக்கு திருமணம். இந்த சமயத்தில் கேட்டால் திட்டுவாரோ என யோசித்து போன் பண்ணினேன். அம்மாவிடம் விஷயத்தை சொன்ன போது, அவர் மீனாவிடம் போனை கொடுத்தார். அவரிடம் விஷயத்தை சொன்ன பிறகு கொஞ்சம் யோசித்து, எங்க டப்பிங் வரணும் என கேட்டு வந்தார். நாளை மறுநாள் திருமணத்தை வைத்துக்கொண்டு முழு படத்துக்கும் டப்பிங் பேசிவிட்டு சென்றார். அவர் அப்படி செய்ய ஒரே காரணம் மீனா கலையின் மீதான வைத்திருந்த காதல் தான் என்று பேசியுள்ளார் சேரன்.

Kanguva: ‘கங்குவா’ படத்தின் மிரட்டலான அப்டேட்: சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நுழைந்த மீனா, தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூரை சார்ந்த வித்யா சாகர் என்பவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகள் நைனிகாவும் படங்களில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யா சாகர் நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்தாண்டு ஜுன் 28 ஆம் தேதி காலமானார். இந்த சம்பவம் மீனா வாழ்க்கையில் கடும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர் தோழிகள். இதனிடையில் தான் மீனா 40 நிகழ்ச்சி திரையுலக பிரபலங்கள் பலரின் முன்னிலையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Por Thozhil: ப்ளூ சட்டை மாறனின் ‘போர் தொழில்’ பட விமர்சனம்: சரத்குமாரின் ரியாக்சன் இதுதான்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.