S.J.Suryah – அஜித் கொடுத்த கார், பைக்கை எஸ்.ஜே.சூர்யா என்ன செய்திருக்கிறார் பாருங்க

சென்னை: S.J.Suryah (எஸ்.ஜே.சூர்யா) அஜித் தனக்கு பரிசாக கொடுத்த கார் மற்றும் பைக் குறித்து இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அஜித் எத்தனையோ படங்கள் ஹிட் கொடுத்திருந்தாலும் வாலி படம் அவரது கரியரில் தி பெஸ்ட் படங்களில் ஒன்று. இப்போது வில்லத்தனத்தில் கலக்கிவரும் அஜித் வில்லனாக நடித்த முதல் படம் வாலி. இரட்டை வேட படங்களில் வித்தியாசமான படமும் வாலிதான்.

வாலி, குஷி: தம்பியின் மனைவியை அடைய நினைக்கும் அண்ணன் செய்யும் காரியங்களை த்ரில்லராகவும், அழகாகவும் காட்சிப்படுத்தியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. படம் வெளியான சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்ட வாலி திரைப்படம் மெகா ஹிட்டானது. வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா விஜய், ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார்.

காதலர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்னை என்ற சாதாரண லைனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் இன்றுவரை க்ளாசிக் படமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக படத்தில் இதுதான் நடக்கப்போகிறது என டைட்டில் கார்டிலேயே கதையை கூறிய எஸ்.ஜே.சூர்யாவின் தைரியம் பரவலாக பேசப்பட்டது.

எல்லாம் கனவு: தொடர்ந்து அவர் இயக்கிய நியூ, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை திடீரென சினிமாவிலிருந்து காணாமல் போனார் எஸ்.ஜே.சூர்யா. இப்படிப்பட்ட சூழலில் இசை என்ற படத்தை கடந்த 2015ஆம் ஆண்டு இயக்கினார். படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் படத்தின் க்ளைமேக்ஸை எல்லாமே கனவு என்று முடித்திருந்தது ரசிகர்கள் பெரும்பாலானோரை திருப்திப்படுத்தியது.

Director and actor SJ Suryah has opened up about the car and bike that Ajith gave him as a gift

நடிகர்: இசைக்கு பிறகு எந்தப் படத்தையும் இயக்காமல் இருக்கும் அவர் நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த மாநாடு படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்த பலரும் மிரண்டு போனார்கள். இறைவி படத்துக்கு பிறகு சூர்யாவிடமிருந்து மிகச்சிறந்த நடிப்பு வந்திருப்பதாக பாராட்டினர். அவர் இப்போது ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்திருக்கிறார். படன் ஜூன் 16ஆம் தேதி வெளியாகிறது.

சூர்யா பேட்டி: படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருப்பதால் தீவிர புரோமோஷன் செய்துவருகிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்தவகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் வாலி படத்தின்போது அஜித் பரிசாக கொடுத்த சாண்ட்ரோ கார் என்ன ஆனது என கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஒரு காரின் ஆயுள் 13 ஆண்டுகள்தான். அஜித் கொடுத்த காரை நான் மூன்று வருடங்கள் ஓட்டினேன்.

என்ன செய்தார்: அதனையடுத்து அந்தக் காருக்கு கறுப்பு பெயிண்ட் அடித்து என் அப்பாவின் நண்பருக்கு கொடுத்துவிட்டேன். அதேபோல் அஜித் எனக்கு பைக் ஒன்றையும் பரிசாக கொடுத்தார். அதனை கொஞ்ச காலம் ஓட்டிவிட்டு எனது நண்பருக்கு கொடுத்துவிட்டேன். நான் எப்போதும் காரையோ, பைக்கையோ விற்கமாட்டேன்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.