ஹிட்லர் ஆக மாறும் விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி சமீபத்தில் வெளிவந்த படம் பிச்சைக்காரன் 2. அவர் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாக இப்படம் மாறியுள்ளதாக சொல்கிறார்கள். தற்போது எந்த அறிவிப்பும் இல்லாமல் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. படைவீரன் பட இயக்குனர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி இப்போது நடித்து வருகிறார். இப்படத்தை கோடியில் ஒருவன் படத்தை தயாரித்த செந்தூர் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். எப்பொழுதும் விஜய் ஆண்டனி படங்களுக்கு சினிமா சென்டிமென்ட் எதிரான தலைப்பையே வைத்து வருகிறார். பிச்சைக்காரன், எமன், சைத்தான் போன்ற படங்களின் வரிசையில் இந்த படத்திற்கு ஹிட்லர் என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.