இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விறுவிறுப்பாக நகரும் படப்பிடிப்புலியோ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல்கட்ட படப்பிடிப்பு கடுமையான சூழலில் காஷ்மீரில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது என நம் அனைவர்க்கும் தெரியும்.அதனை படக்குழு வீடியோவின் மூலமே வெளியிட்டது. இதையடுத்து படக்குழு காஷ்மீரில் பட்ட கஷ்டத்தை பார்த்த விஜய் இனி வெளிப்புறங்களில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம், செட் அமைத்தே படப்பிடிப்பை நடத்தலாம் என லோகேஷிடம் கூறியதாகவும், லோகேஷும் இதை ஏற்றுக்கொண்டு மீதமுள்ள படப்பிடிப்புகளை செட் அமைத்து படமாக்கி வருவதாகவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில் தற்போது எந்த தடங்கலும் இன்றி ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கின்றதாம்
சாதனை செய்த லியோலியோ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது. இப்படத்தின் பூஜை துவங்கும் முன்பே ரசிகர்கள் படத்தை பற்றி பேச துவங்கிவிட்டனர். மேலும் இணையத்தில் படத்தை பற்றி வெளியாகும் தகவல்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் இப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடிகளை தயாரிப்பாளருக்கு சம்பாதித்து கொடுத்துள்ளது. டிஜிட்டல் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ் என கிட்டத்தட்ட 400 கோடி வரை லியோ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே சம்பாதித்துள்ளது. இதன் மூலம் ரிலீசுக்கு முன்பே லியோ திரைப்படம் சாதனை படைத்து வரும் நிலையில் இப்படம் ரிலீசான பிறகு ஆயிரம் கோடி வசூலை எட்டி இந்தியளவில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது
அடுத்த அப்டேட்விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அன்றைய நாள் லியோ திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். லியோ படத்தின் அப்டேட் வெளியாகி கிட்டத்தட்ட பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கண்டிப்பாக அப்டேட் வரும் என ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர். அநேகமாக லியோ படத்தின் கிலிம்ஸ் வீடியோ விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி இல்லை என்றால் படத்தின் போஸ்டராவது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முதல்முறைஇந்நிலையில் பொதுவாக லோகேஷின் படங்களில் பாடல் காட்சிகளுக்கு அந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார். ஆனால் மாஸ்டர் படத்தில் விஜய்யின் ரசிகர்களுக்காக பாடல் காட்சிகளை வைத்திருந்தார் லோகேஷ். விக்ரம் படத்தில் கூட ஒரு சில பாடல் காட்சிகளை வைத்த லோகேஷ் பெரும்பாலும் பாடல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்ததாக தெரியவில்லை. ஆனால் லியோ படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்கு லோகேஷ் மெனக்கெடுவதாக தெரிகின்றது. ஒரு பாடலுக்காக கிட்டத்தட்ட 2000 நடன கலைஞர்களை இறக்கி மிகப்பிரம்மாண்டமான பாடல் காட்சியை லோகேஷ் உருவாக்கி வருகின்றார். தற்போது இப்பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாகவும், இதுவரை தமிழ் சினிமாவில் உருவான பாடல் காட்சிகளிலேயே இது பேசப்படும் பாடலாக இருக்கும் என்றும் தகவல்கள் வருகின்றன. அந்த அளவிற்கு லோகேஷ் பார்த்து பார்த்து இப்பாடலை செதுக்கியுள்ளாராம். இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது