சென்னையில் ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்துகள் தீயில் எரிந்து நாசமாகிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேகே நகர் ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து, லாரி மற்றும் மினி சரக்கு வாகனங்கள் தீயில் கருகி நாசமாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள், விரைந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
அதற்குள் இரு பேருந்துகள் உள்ளிட்ட 4 வாகனங்கள் தீயில் கருகி சேதம் ஆகியது. தற்போதைய நிலையில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தீயை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பேருந்து மற்றும் வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துக் கொளுத்தினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையின் பரபரப்பான ஒரு பகுதியில், ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் தீப்பற்றி எரிந்து நாசமாகிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.