சென்னை: இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொள்ள சென்னைக்கு வந்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குவிந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகையாக மாறிய லாஸ்லியாவுக்கு அடுத்தடுத்து சில பட வாய்ப்புகள் குவிந்தன.
இந்நிலையில், ஜிம் டிரெய்னர் ஒருவருடன் நெருக்கமாக ஏகப்பட்ட போட்டோக்களை லாஸ்லியா வெளியிட்ட நிலையில், இருவரும் காதலிக்கின்றனரா? என்றும் ரொம்ப கேவலமா இருக்கு என்றும் ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகள் அவரது போஸ்ட்டுக்கு கீழ் குவிந்துள்ளன.
பப்ளியா இருந்த லாஸ்லியா: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர்களிலேயே லாஸ்லியா அளவுக்கு அழகான பெண் யாருமே இல்லை என லாஸ்லியாவின் ஆர்மியினர் கொண்டாட காரணமே அவரது அந்த க்யூட்டான பப்ளினஸ் தான்.
ஆனால், சினிமாவில் நடிக்க ஸ்லிம் ஆக வேண்டும் என நடிகை லாஸ்லியா தற்போது கடுமையாக ஜிம்மே கதியென வொர்க்கவுட் செய்து ஜிம் டிரெய்னருடன் எடுத்துக் கொண்ட ஏகப்பட்ட போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கவினுடன் பிரேக்கப்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே மலர்ந்த காதல் தான் ரசிகர்களை அந்த சீசனையே பார்க்கத் தூண்டியது. கவிலியா என ஹாஷ்டேக்குகள் அந்த சீசனை வேறலெவலில் டிரெண்டாக்கியது.
ஆனால், லாஸ்லியாவின் அப்பா மறைந்த மரியநேசன் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது பிக் பாஸ் வீட்டுக்கு வந்து லாஸ்லியாவை திட்டிய பின்னர் கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் பிரேக்கப் செய்துக் கொண்டு பிரிந்தனர். சினிமாவில் இருவரும் பிசியான நடிகர்களாக மாறினாலும், இருவரும் ஒன்றாக சேர்ந்துக் கூட நடிக்கவில்லை.
படங்கள் ஓடவில்லை: கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமான பிரெண்ட்ஷிப் படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார் லாஸ்லியா. அதன் பின்னர், பிக் பாஸ் தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்திலும் நடித்தார். ஆனால், லாஸ்லியாவுக்கு சினிமாவில் சக்சஸ் கிடைக்கவில்லை.
பிக் பாஸ் அல்டிமேட்டில் லாஸ்லியா வருவார் என கடைசி வரை பூச்சுற்றியே கடைசியில் ரம்யா பாண்டியனை தான் கொண்டு வந்தனர். சில விளம்பரப் படங்களில் நடித்துள்ள லாஸ்லியா எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து தனது தோற்றத்தை மாற்றி வருகிறார்.
ஜிம் டிரெய்னருடன் நெருக்கம்: இந்நிலையில், ஜிம் டிரெய்னருடன் ரொம்பவே நெருக்கமாக இருக்கும் ஏகப்பட்ட போட்டோக்களை நடிகை லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது இந்த தோற்றத்திற்கு காரணமே அவர் தான் என்றும் தற்போது தான் செம ஃபிட்டாக உணர்வதாக பதிவிட்டுள்ளார். ஆனால், ஜிம் டிரெய்னருடன் அதிகமாக போட்டோக்களை லாஸ்லியா பதிவிட்ட நிலையில், ஏகப்பட்ட மோசமான கமெண்ட்டுகள் குவிந்துள்ளன.
உங்க அப்பா இருந்திருந்தா: கேவலமா இருக்கு, உங்க அப்பா இருந்திருந்தா கேட்டு இருப்பார். இல்லாததால இவ்ளோ ஆட்டம், சினிமாவிலும் நடிக்கவில்லை, சீரியலிலும் நடிக்கவில்லை எப்படி இவ்ளோ காசு இருக்கு, மீண்டும் இலங்கைக்கே வந்துடு அதே டிவியில் வேலைக்கு சேர்த்துக் கொள்வார்கள் என படு மோசமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
லாஸ்லியா அப்படியே சமந்தா வைப்ஸ் கொடுக்கிறாங்க, உன்னோட ஹார்ட்வொர்க் உனக்கான இடத்தை கொடுக்கும், ஹேட்டர்களை பார்த்து கவலைப்படாதீங்க, முன்னேறி செல்லுங்க லாஸ்லியா என லாஸ்லியாவின் ரசிகர்கள் வழக்கம் போல அவருக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளனர்.