Prabhudeva: உண்மையே, இந்த வயதில் நான் மீண்டும் அப்பாவாகியிருக்கிறேன்: பிரபுதேவா

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Prabhudeva’s wife gives birth to baby girl: பெண் குழந்தைக்கு அப்பாவானதில் மகிழ்ச்சியாக இருப்பதாக பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

​பிரபுதேவா​Arya: ஆர்யா, சயீஷா மகளா இது, அதற்குள் எப்படி வளர்ந்துட்டார்!: செம க்யூட்டான்ஸ் மாஸ்டரும், நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா அப்பாவாகிவிட்டாராம் என்று தான் ஊரெல்லாம் பேச்சாக உள்ளது. 50 வயதில் அப்பாவாகியிருக்கிறார். ஒரு வழியாக அந்த குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த செல்லக்குட்டி தன் அப்பாவை போன்று பெரிய டான்ஸராகி இந்த உலகத்தையே கலக்கப் போகிறது என்று எல்லாம் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் மகள் பிறந்தது பற்றி பிரபுதேவா முதல்முறையாக பேசியிருக்கிறார்.சித்தார்த்​சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்கிறேன்​​மகள்​பிரபுதேவா கூறியிருப்பதாவது, ஆமாம், நீங்கள் கேள்விப்பட்டது உண்மை தான். நான் இந்த வயதில் மீண்டும் தந்தை ஆகியிருக்கிறேன். நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். முழுமை அடைந்ததாக உணர்கிறேன். நான் வேலைப்பளுவை ஏற்கனவே குறைத்துவிட்டேன். மகளுடன் நேரம் செலவிட விரும்புகிறேன் என்றார்.

​வேலை​Leo:விஜய்யின் லியோ கதை எல்.சி.யூ.வே தான்: செட்டில் இருந்து வெளியான போட்டோபிரபுதேவா மேலும் கூறியதாவது, நான் அதிகமாக வேலை செய்வது போன்று உணர்ந்தேன். அதனால் தான் வேலையை குறைத்துக் கொண்டிருக்கிறேன். என் குடும்பம், மகளுடன் நேரம் செலவிட விரும்புகிறேன். வேலைக்காக அதிகமாக ஓடியது போதும் என முடிவு செய்துவிட்டேன் என்றார்.

​பிசி​தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் வேலை செய்து வருகிறார் பிரபுதேவா. இதனால் சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூர் என ஓடிக் கொண்டே இருக்கிறார். மகள் வந்திருப்பதால் தற்போது வீட்டில் அதிக நேரம் இருக்க விரும்புகிறார். பிரபுதேவா குடும்பத்தில் பிறந்திருக்கும் முதல் பெண் குழந்தை இது. முதல் திருமணம் மூலம் பிரபுதேவாவுக்கு மூன்று மகன்கள் பிறந்தார்கள்.

​இரண்டாவது திருமணம்​பிரபுதேவாவுக்கும், முதல் மனைவி ரம்லத்துக்கும் கடந்த 2011ம் ஆண்டு விவாகரத்து நடந்தது. இதையடுத்து சிங்கிளாக இருந்து வந்த பிரபுதேவா டாக்டர் ஹிமானி சிங்கை கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கொரோனா வைரஸ் பிரச்சனை நேரத்தில் வீட்டில் வைத்து அவர்களின் திருமணம் எளிமையாக நடந்தது. பிரபுதேவாவுக்கு திருமணம் நடந்தது உடனே யாருக்கும் தெரியவில்லை. அதை ரகசியமாக வைத்திருந்தார்கள்.

​Tamannaah: விஜய் எனக்கான ஸ்பெஷல் நபர்: காதலை ஒப்புக் கொண்ட தமன்னா

​திருப்பதி​இரண்டாவது திருமணம் பற்றி பிரபுதேவா இதுவரை எதுவும் சொல்லவில்லை. அண்மையில் தான் தன் காதல் மனைவியான ஹிமானி சிங்குடன் சேர்ந்து திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. ஹிமானி சிங் மாஸ்க் அணிந்திருந்ததால் அவரின் முகம் தெரியவில்லை. மனைவியின் முகம் தெரியும்படி புகைப்படம் வெளியிடுமாறு பிரபுதேவாவிடம் ரசிகர்கள் தெரிவித்தார்கள்.

​ராஜு சுந்தரம்​பிரபுதேவாவுக்கும், டாக்டர் ஹிமானி சிங்கிற்கும் திருமணம் நடந்தது அவரின் அண்ணன் டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் சொல்லித் தான் தெரிய வந்தது. பேட்டி ஒன்றில் தன் தம்பிக்கு இரண்டாவது திருமணம் நடந்ததை கூறினார். ஆனால் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பிரபுதேவா எப்பொழுதுமே தன் தனிப்பட்ட வாழ்க்கையை பர்சனலாக வைக்க விரும்புபவர். அதனால் தான் இரண்டாவது திருமணம் பற்றி தெரிவிக்கவில்லை.
​பகீரா​கெரியரை பொறுத்தவரை பிரபுதேவா நடிப்பில் கடைசியாக வெளியான படம் பகீரா. ஆதிக் ரவிசந்திரன் இயக்கிய அந்த படத்தில் வித்தியாசமாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். டான்ஸ் மாஸ்டரை விட நடிகர் பிரபுதேவா தான் அதிகம் பிசியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.