பாலிவுட் திரையுலகில் 15 வயதில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்து தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்.
ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்திவரும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் திரையுலகில் அவரிடம் காட்டப்பட்ட பாகுபாடுக் குறித்துப் பகிர்ந்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய ஹன்சிகா, “ முதலில் தென்னிந்தியப் படங்களில் நான் அதிகம் நடித்து வந்ததால் பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர்கள் எனக்கு ஆடைகளை வழங்க மறுத்தனர். `உங்களுக்கு ஆடைகளை வழங்க எங்களுக்கு விருப்பம் இல்லை’ என்று கூறினர். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. என்னை நிராகரித்தவர்களே தானாக முன்வந்து, உங்கள் படம் வெளியாக இருக்கிறது.
டிரெய்லர் வெளியீட்டு விழா உள்ளது. நீங்கள் ஏன் எங்களது ஆடைகளை அணியக்கூடாது? என்று கேட்கின்றனர். நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் சரி என்றே சொல்கிறேன். காரணம் அவர்களுக்கும், எனக்கும் வித்தியாசம் இருக்கிறது. எந்தத் திரையுலகில் நடித்தாலும் நான் இந்திய நடிகை என்றே கூற விரும்புகிறேன்” என்று பேசியிருக்கிறார்.