இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ப. பாண்டி படம் மூலம் இயக்குநரான தனுஷ், அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தை தற்போதைக்கு டி50 என்று அழைக்கிறார்கள். அந்த படத்தை இயக்குவதுடன், நடிக்கவும் செய்கிறார் தனுஷ்.
சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்கிறேன்
சந்தீப் கிஷனும், எஸ்.ஜே. சூர்யாவும் தனுஷின் சகோதரர்களாக நடிக்கிறார்கள். துஷாரா விஜயன் தனுஷின் சகோதரியாக நடிக்கிறார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மூன்று சகோதரர்களை பற்றிய படமாக உருவாகவிருக்கிறது டி50. இந்நிலையில் அந்த படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்திற்காக தலைமுடியையும், தாடியையும் நீளமாக வளர்த்து ஆள் அடையாளம் தெரியாதபடி இருக்கிறார் தனுஷ். இந்நிலையில் டி50 படத்திற்காக தலைமுடியை ஒட்ட நறுக்கி, கிளீன் ஷேவ் செய்து சின்னப் பையன் போன்று வரவிருக்கிறாராம்.
டி50 படத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று படம் புகழ் அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். அவர் தனுஷுக்கு ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
தனுஷுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். டி50 படப்பிடிப்பு 90 நாட்கள் தொடர்ந்து நடக்கவிருக்கிறதாம்.
அந்த படத்திற்காக சென்னை ஈசிஆரில் பிரமாண்ட செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு சுமார் 500 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
டி50 படத்திற்காக முடியை வெட்டி ஒரு நிமிட கிளிம்பிஸ் வீடியோவை தயார் செய்துவிட்டார் தனுஷ். அந்த வீடியோவை விரைவில் வெளியிடப் போகிறார்கள்.
டி50 படப்பிடிப்பு ஜூலை மாதம் 1ம் தேதி சென்னையில் துவங்கவிருக்கிறது. படம் குறித்து ஏற்கனவே தெளிவாக திட்டமிட்டுவிட்டதால் ஒரேயடியாக 90 நாட்களில் ஷூட்டிங்கை முடிக்கப் போகிறார் தனுஷ்.
படத்திற்கு ராயன் என்கிற தலைப்பை தேர்வு செய்து வைத்திருக்கிறார் இயக்குநர். இந்நிலையில் டி50 படத்தில் நடிப்பதை எஸ்.ஜே. சூர்யா பேட்டி ஒன்றில் உறுதி செய்துவிட்டார்.
இதற்கிடையே டி50 படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடிக்குமாறு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திடம் கேட்டார்கள். அதற்கு அவர் தனுஷ் படத்தில் நடிக்க முடியாது என்று கூறியதாக தகவல் வெளியானது.
Dhanush: தனுஷுக்கு என்னால ‘நோ’ சொல்லவே முடியாது: விஜய் பட ஹீரோயின்
அது குறித்த செய்தியை சமூக வலைதளத்தில் பார்த்த கங்கனா ரனாவத் விளக்கம் அளித்துள்ளார். தனுஷ் இஸ் மை ஃபேப். அவருக்கு என்னால் நோ சொல்லவே முடியாது. தனுஷ் பட வாய்ப்பு என்னை தேடி வரவும் இல்லை, அதை நான் ஏற்க மறுக்கவும் இல்லை. பொய்யான செய்தியை நம்ப வேண்டாம் என்றார்.
தனுஷுக்கு நோ சொல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார் கங்கனா. பேசாமல் அவரையே டி50 படத்தில் ஹீரோயினாக்கிவிடலாமே என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் தனுஷ். கங்கனா ரனாவத்தும் அப்படித் தான். அதனால் அவர்கள் இருவரையும் சேர்ந்து பெரிய திரையில் பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.
எமர்ஜென்சி படத்தில் நடித்து முடித்திருக்கும் கங்கனா ரனாவத் தன் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். தான் ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.