இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் சினிமாவில் வசூல் சக்ரவர்தியாகவும், தளபதியாகவும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்திலிருந்து கிலிம்ஸ் வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
இது ஒருபக்கம் இருக்க விஜய் லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த செய்தி தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தியாக இருந்து வருகின்றது. வித்யாசமான படங்களை கொடுத்துவரும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடிப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ளது.
மீண்டும் விஜய்யுடன் இணையும் வாய்ப்பு
AGS தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இப்படம் உருவாக இருக்கின்றது. இப்படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளமாக கொடுக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க இப்படத்தின் பூஜை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு துவங்கும் என்றும், படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Suriya: மீண்டும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா ? படத்தின் கதை இதுதானாம்..எப்போ ஷூட்டிங் தெரியுமா ?
இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜெ சூர்யா நடிக்கலாம் என செய்திகள் வந்துள்ளன. தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வரும் எஸ்.ஜெ சூர்யா மீண்டும் விஜய்யுடன் இணைவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இவர் ஏற்கனவே விஜய்க்கு வில்லனாக மெர்சல் படத்தில் நடித்து மிரட்டியிருந்தார்.
இதைத்தொடர்ந்து இவர் மீண்டும் தளபதி 68 படத்தின் மூலம் விஜய்யுடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் எஸ்.ஜெ சூர்யா விஜய்க்கு குஷி பட கதையை கூறியதைப்பற்றி பேசியிருந்தார். அவர் பேசியதாவது, விஜய்யிடம் நான் குஷி பட கதையை கூற சென்றேன். விஜய்க்கு எப்போதும் முழு கதையையும் கூறவேண்டும். எனவே நான் குஷி படத்தின் முழு கதையையும் கூறினேன்.
கதை கூறிய அனுபவம்
கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் விஜய்யிடம் குஷி பட கதையை சொன்னேன். கதையை கேட்கும் போது அவரிடம் இருந்து ஒரு ரியாக்ஷனும் இல்லை. சிரிக்கவும் இல்லை. எனவே நான் விஜய்க்கு கதை பிடிக்கவில்லையோ என நினைத்து, வேறொரு கதையை கூறவா என்றேன்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
ஆனால் விஜய்யோ, ஏன் கதை நல்லாதானே இருக்கு. எனக்கு கதை பிடித்திருக்கின்றது. நாம் இப்படத்தை பண்ணலாம் என்றார். இந்த சம்பத்தை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் எஸ்.ஜெ சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.