நாளை விற்பனைக்கு வரவிருக்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மாடல் பல்வேறு மேம்பாடுகளுடன் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக விற்பனையில் உள்ள 2 வால்வு எக்ஸ்ட்ரீம் 160r மாடலை அடிப்படையாக கொண்டதாகும்.
2023 Hero Xtreme 160R 4V
எக்ஸ்ட்ரீம் 160r 4v மாடலில் குறிப்பாக முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனுக்கு பதிலாக கோல்டு நிறத்திலான யூஎஸ்டி ஃபோர்க் மாடல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்தப்படியாக, Xtreme 160R 4V பைக்கில் திருத்தப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் கூடுதல் அம்சங்களையும் பெற வாய்ப்புள்ளது. புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி மோட்டார்சைக்கிளை அதிக வாடிக்கையாளர்களை கவரும் தோற்றமளிக்க புதிய டூயல் டோன் பெயிண்ட் நிறங்களை பெற வாய்ப்புள்ளது.
இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொடுக்கப்பட்டு கூடுதலாக மோடுகள் இணைக்கப்படலாம்.
2023 எக்ஸ்ட்ரீம் 160R 4V மாடலில் 4 வால்வுகளை கொண்டு கூடுதல் பவர் வெளிப்படுத்தலாம். தற்பொழுது உள்ள ஏர் கூல்டு 163cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பெற்று 8,500 Rpm-ல் அதிகபட்சமாக 15 bhp பவர் மற்றும் 6,500-rpmல் 14Nm டார்க் கொண்டு 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றதாக அமைந்திருக்கும்.