சீயான் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் படம் ‘தங்கலான்’. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார் பா. ரஞ்சித். இந்தப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் விக்ரமுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் ஷுட்டிங்கிற்கு பிரேக் விட்டனர் படக்குழுவினர். இதனையடுத்து தற்போது விக்ரம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளதால் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு தற்போது ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். கடந்தாண்டு பூஜையுடன் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமின் 61 வது படமாக இதன் படப்பிடிப்பு துவங்கியது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கேஜிஎப் குறித்த உண்மை வரலாற்றை கூறும் விதமாக தங்கலானை இயக்கி வருகிறார் பா. ரஞ்சித். இதனை அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப்படத்தை பீரியட் பிலிமாக இயக்கி வருகிறார் ரஞ்சித். விக்ரமுடன் பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.
Leo: ‘லியோ’ படம் இப்படித்தான் ரிலீஸ் ஆக போகுதாம்: வெளியான மாஸ் தகவல்.!
கடந்த மாதம் ‘தங்கலான்’ பட ஒத்திகையில் ஈடுபட்ட போது கமழும் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இதனால் அவருக்கு விழா எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் ஷுட்டிங்கிற்கு சிறிது காலம் பிரேக் விட்டனர் படக்குழுவினர். இதனிடையில் அண்மையில் லண்டன் சென்றார் விக்ரம். அங்கு காயமெல்லாம் குணமாகி விக்ரம் ஸ்டைலிஷ் லுக்கில் வலம் வந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகின.
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக ‘தங்கலான்’ பட அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மதுரையில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 ஆம் துவங்கவுள்ள இந்த படப்பிடிப்பு 12 நாட்கள் மதுரை அருகே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. ‘தங்கலான்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Ajith: அஜித்தின் இந்த உயரத்திற்கு காரணம்.. மேடையில் கண் கலங்கிய பிரபல இயக்குனர்.!