மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் அதிபருடன், புதின் ஆலோசனை நடத்தினார். பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் ஜூலை மாத தொடக்கத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் ரஷிய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிற்கு வழங்கப்படும் என புதின் தெரிவித்துள்ளார். ரஷியாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உக்ரைன் உள்ளிட்ட அதன் ஆதரவு நாடுகள் ரஷிய அதிபர் புதினின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில் ரஷிய அதிபரின் இந்த அணு ஆயுத அச்சுறுத்தல் பாபா வங்காவின் கணிப்பை நினைவுபடுத்தியுள்ளது.
அதாவது 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய நாடு ஒன்று மக்கள் மீது அணு ஆயுத போரை மேற்கொள்ளும் என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாபா வங்காவின் கணிப்புகள்
இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு, இளவரசி டயானா மரணம், 2004 சுனாமி பேரலைகள், ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம், உலகையே ஆட்டி படைத்த கொரோனா என அனைத்தும் பலித்துள்ளதாக கூறப்படுகிறது. பாபா வங்காவின் கணிப்புகள் அனைத்தும் நிறைவேறியதால் அணு ஆயுத விஷயத்திலும் அது நடந்துவிடுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.