சென்னை: நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படம் லால் சலாம்.
3, வை ராஜா வை படங்களை தொடர்ந்து லால் சவாம் படத்தை இயக்கி வருகிறார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கேரக்டரில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு மும்பை உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ளது.
இணையத்தை கலக்கும் ரஜினி வீடியோ: நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகி வரும் படம் லால் சலாம். ரஜினிகாந்த் இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற முஸ்லிம் கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இதன் சூட்டிங் மும்பை உள்ளிட்ட இடங்களில் நடந்தது. முன்னதாக இந்த கேரக்டரின் கெட்டப்பில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
நடிகர் தனுஷுடனான விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினி, தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக முஷாபிர் என்ற இசை ஆல்பத்தை அவர் பல மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து வெளியிட்டார். தமிழில் இந்த ஆல்பத்தை ரஜினியே வெளியிட்டார். இந்நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் லால் சலாம் படம் உருவாகிவருகிறது. முன்னதாக அவர் 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியுள்ளார். தொடர்ந்து டைரக்ஷனில் ஈடுபடாமல் இருந்த அவர், தனுஷுடனான பிரிவிற்கு பிறகு தற்போது லால் சலாம் படத்தை டைரக்ட் செய்து வருகிறார்.
படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய, ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஜக்குபாய் என்ற படத்தில் கமிட்டாகியிருந்தார் ரஜினி. ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டது. இந்நிலையில், அந்த கேரக்டரின் லைனை தற்போது மொய்தீன் பாய் கேரக்டருக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் ஏறக்குறைய ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்தப் படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலே முன்னதாக கிரிக்கெட்டை மையமாக வைத்து ஜீவா என்ற படத்தில் நடித்திருந்தார். அவருக்கு கைக்கொடுத்த படங்களில் அதுவும் ஒன்று. இந்நிலையில், லால் சலாம் படமும் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
இதனிடையே லால் சலாம் படத்தில் ரஜினியின் மொய்தீன் பாய் கெட்டப்பில் இன்றைய தினம் சூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தாடி, தலையில் குல்லா சகிதம் அவர் இந்த வீடியோவில் காணப்படுகிறார். முன்னதாக அவரது கெட்டப்பின் பர்ஸ்ட் லுக் வெளியானது. ஆனால் இந்த வீடியோவில் அவர் சூட்டிங் ஸ்பாட்டில் அனைவருடனும் உற்சாகமாக பேசிக் கொண்டு கைக்கொடுத்துக் கொண்டும் காணப்படுவது ரசிகர்களை கவர்ந்துள்ளது.