ரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி உலக சுகாதார நிறுவனம் சார்பில் ஜூன் 14ல் உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘
ரத்தம் கொடுங்கள்; பிளாஸ்மா கொடுங்கள்; வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளுங்கள்; அடிக்கடி பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. நல்ல உடல்நிலையில் உள்ள 18 — 65 வயதுடைய எவரும் ரத்த தானம் செய்யலாம். உடல் எடை குறைந்தது 50 கிலோ இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்த பின் ரத்த தானம் செய்ய வேண்டும். 350 மில்லி மட்டுமே தானத்துக்கு எடுக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement