மகிழ்ச்சியான இடம் – காதலர் விஜய் வர்மா பற்றி தமன்னா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். தமன்னாவுக்கும் ஹிந்தி நடிகரான விஜய் வர்மாவுக்கும் இடையே காதல் என கடந்த சில மாதங்களாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் வர்மா பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் தமன்னா.
“ஒருவர் உங்களுடன் இணைந்து நடிக்கிறார் என்பதற்காக அவர் மீது நமக்கு ஈர்ப்பு வந்துவிடாது. நான் பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒருவர் யார் மீதாவது காதலில் விழ வேண்டுமென்றால், அந்த ஒருவருக்காக எதையாவது உணர வேண்டும். அது மிகவும் தனிப்பட்ட ஒன்று. அவர்கள் வாழ்க்கைக்காக என்ன செய்கிறார்கள் என்பதும் இதுவும் ஒன்றல்ல. இதற்காக அது நடப்பதில்லை. நான் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வைத்துள்ளேன். இந்தியாவில் ஒரு பெண் அவரது வாழ்க்கைத் துணைக்காக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். எனது உலகத்தைப் புரிந்து கொண்ட ஒருவர் எனக்குக் கிடைத்துள்ளார். அவரை நான் காக்கிறேன், விஜய் வர்மா எனது மகிழ்ச்சியான இடம்,” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பெல்லாம், விஜய் வர்மா பற்றிய கேள்விகளுக்கு மறுப்பு தெரிவித்து வந்த தமன்னா முதன் முறையாக அவர் பற்றிப் பேசியுள்ளார்.