இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவிக்கு ஆபாச புகைப்படம், எஸ்எம்எஸ்கள் அனுப்பிய வாலிபர் கைது.!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் தங்களது புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவிக்கு அந்த வாலிபரின் எண்ணில் இருந்து வீடியோகால் அழைப்பு வந்தது. அதனை எடுத்துப் பேசியபோது அதில் புகைப்படம் அனுப்பிய நபர் இல்லாமல், வேறு ஒருவர் இருந்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவி வாலிபரிடம் கேட்டதற்கு அழகான முகத்தை அனுப்பினால் தானே பெண்கள் பேசுவார்கள். அதனால் தான் போலியான படத்தை அனுப்பினேன் என்றுத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த மாணவி அந்த வாலிபரின் நட்பைத் துண்டித்துக் கொண்டார். இருப்பினும் அந்த வாலிபர் பள்ளி மாணவிக்கு தொடர்ந்து ஆபாச எஸ்எம்எஸ்கள், புகைப்படங்கள் என்று தொடர்ச்சியாக அனுப்பி பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி தன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவம் குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தண் படி போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சிவா என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து விசாரணை நடத்துகின்றனர்.