S.J.Suryah – எஸ்.ஜே.சூர்யாவின் அசுர உழைப்பு.. வாலி வாய்ப்பை அஜித் ஏன் கொடுத்தார் தெரியுமா?

சென்னை: S.J.Suryah (எஸ்.ஜே.சூர்யா) அஜித் படத்துக்காக நாய்க்குட்டி ஒன்றை பத்திரமாக எஸ்.ஜே.சூர்யா டெல்லிக்கு கொண்டுபோய் சேர்த்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.

கோலிவுட்டில் சில படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் இன்றுவரை பலரது ஃபேவரைட் இயக்குநராக இருப்பவர் எஸ்.ஜே.சூர்யா. அஜித்தை வைத்து வாலி படத்தை முதல்முதலாக இயக்கினார். அந்தப் படத்துக்காக அவர் சம்பளமே வாங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அந்தப் படத்தின் மேக்கிங்கிலும், கதையிலும் எஸ்.ஜே.சூர்யாவின் அசுர உழைப்பு வெளிப்பட்டதால் படம் மெகா ஹிட்டானது.

குஷி: வாலி படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு விஜய் ஜோதிகாவை வைத்து குஷி படத்தை இயக்கினார். வாலி படம் போலவே குஷி படமும் மெகா ஹிட்டடிக்க கோலிவுட்டின் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அந்தப் படத்துக்காக முதல்முறையாக லட்சங்களில் அவர் அட்வான்ஸாக வாங்கிய பணத்தில் தனது உதவி இயக்குநர்கள் ஏழு பேருக்கு புது பைக்கை வாங்கிக்கொடுத்தது சமீபத்தில் தெரியவந்து அவருக்கு பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.

அப்போதே செய்துவிட்ட சூர்யா: இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தின் துணையோடு சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதையை எடுப்பது சுலபத்திலும் சுலபமாக மாறிவிட்டது. ஆனால் தொழில்நுட்பம் பெரிதாக வளராத காலத்திலேயே எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற சைன்ஸ் ஃபிக்‌ஷன் கதையை எடுத்து அதில் வெற்றியும் கண்டார். அதேபோல் பேரலல் உலகம் என்ற தீமை வைத்துக்கொண்டு அன்பே ஆருயிரே படத்தை எடுத்து அசத்தினார்.

எல்லாம் கனவு: ஒரு இயக்குநருக்கு தனது கதை மேல் எவ்வளவு நம்பிக்கை வேண்டுமோ அதைவிட அதிக நம்பிக்கை தனது திரைக்கதை மீது வேண்டும். அப்படி அவர் எடுத்த படம்தான் இசை. பல வருடங்களுக்கு பிறகு பெரிய பட்ஜெட்டில் அவரே தயாரித்த அந்தப் படம் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவுக்கு இடையே நடந்த மோதலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதாக அப்போது பேச்சு எழுந்தது. படம் முழுக்க விறுவிறுப்பாக கொண்டு சென்று கடைசியில் எல்லாமே கனவு என்று முடித்தது அப்ளாஸை அள்ளியது. அப்படத்துக்காக இசையமைப்பாளர் அவதாரத்தையும் அவர் எடுத்திருந்தார்.

This is The Reason for ajith give Vaali Movie Chance to S.J.Suryah

நடிகராக கலக்கிய சூர்யா: கிழக்கு சீமையிலே படத்தில் ஒரு சில சீன்களில் தலை காட்டியவர் நியூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படிப்பட்ட சூழலில் இறைவி படத்தில் அவர் நடிப்பை பார்த்த ரசிகர்கள் வாய் பிளந்தனர். அப்போது தொடங்கிய அவரது ஃபார்ம் கடைசியாக வெளியான மாநாடுவரை தொடர்கிறது. ஜூன் 16ஆம் தேதி அவர் நடிப்பில் பொம்மை படமும் வெளியாகிறது. நிச்சயம் அந்தப் படத்திலும் சூர்யாவின் நடிப்பு அதகளம் செய்யும் என நம்பலாம்.

உதவி இயக்குநர்: எஸ்.ஜே.சூர்யாவுக்கு நடிகராக வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால் வாய்ப்பு ஏதும் கிடைக்காததால் இயக்குநர் வசந்த்திடம் உதவி இயக்குநராக இணைந்தார். அதுவும் சாதாரணம் இல்லை. கடைசி அசிஸ்டெண்ட் டைரக்டராக இணைந்தார். இந்நிலையில் ஆசை படத்தில் அவர் பணிபுரிந்தபோது ஒரு நாய்க்குட்டியை ரயிலில் அதுவும் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கூட்டத்தோடு கூட்டமாக பத்திரமாக கொண்டு போய் டெல்லியில் சேர்த்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.

நாய்க்குட்டி: ஆசை படத்தில் சுவலட்சுமிக்கு அஜித் ஒரு நாய்க்குட்டியை பரிசாக கொடுப்பார். கதை அப்படியே டெல்லிக்கு நகரும். கண்டினியூட்டி வேண்டும் என்பதால் அதே நாய்க்குட்டியை டெல்லிக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எப்படி கொண்டுப்போவது என்று எல்லோரும் யோசித்தார்களாம்.

எஸ்.ஜே.சூர்யாவோ எதையும் யோசிக்காமல் நாய்க்குட்டியை எடுத்துக்கொண்டு அன் ரிசர்வ் கோச்சில் கடும் நெரிசலுக்கு மத்தியில் பல மணி நேரம் பயணம் செய்து டெல்லியில் இறங்கி ஆட்டோவை பிடித்து அந்த நாய்க்குட்டியை ஒருவழியாக டெல்லி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கொண்டுபோய் சேர்த்துவிட்டாராம்.

இதனை படக்குழுவே பாராட்டியதாம். மேலும் இதுபோன்று பல விஷயங்களை ஆசை படத்துக்காக செய்திருக்கிறாராம். குறிப்பாக எவ்வளவு வறுமையில் இருந்தாலும் நேர்மை தவறாமல் தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பாராம் எஸ்.ஜே.சூர்யா. இப்படி பலவற்றை சூர்யாவிடம் கவனித்தததால்தான் வாலி படத்தின் வாய்ப்பை அஜித் அவருக்கு கொடுத்தாராம். இந்தத் தகவலை நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து பகிர்ந்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.