இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
பிரம்மாண்டமான பாடல்பெரும்பாலும் லோகேஷ் கனகராஜ் தன் படங்களில் இடம்பெறும் பாடல்களில் அதிக கவனம் செலுத்த மாட்டார். திரைக்கதையிலும், சண்டை காட்சிகளிலும் லோகேஷ் அதிக கவனம் செலுத்தி வந்தார். ஆனால் தற்போது லியோ படத்தில் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம் லோகேஷ் கனகராஜ். மிகப்பிரமாண்டமான பாடல் காட்சி ஒன்றை லோகேஷ் தற்போது படமாக்கி முடித்துள்ளார். 2000 நடனக்கலைஞர்களை கொண்ட இப்பாடல் காட்சி தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான வெளியான பாடல் காட்சிகளில் ஒன்றாக இருக்குமாம். அந்த அளவிற்கு லோகேஷ் பார்த்து பார்த்து இப்பாடல் காட்சியை உருவாக்கி இருக்கின்றார்
ஒத்திகைலோகேஷ் தன் படங்களின் சண்டை காட்சிகளுக்கு நாள் கணக்கில் ஒத்திகை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதுபோல தற்போது பாடல் காட்சிகளுக்கும் லோகேஷ் ஒத்திகை பார்த்துள்ளார். லியோ படத்தில் இடம்பெறும் பிராம்மாண்டமான பாடல் காட்சிக்காக லோகேஷ் ஒரு வாரம் ஒத்திகை பார்த்துள்ளாராம். விஜய் உட்பட அனைத்து நடன கலைஞர்களையும் வைத்து இந்த ஒத்திகை நடந்துள்ளது. எனவே இப்பாடலை அந்தளவிற்கு முக்கியமான ஒன்றாக கருதுகிறார் லோகேஷ். என்னதான் லியோ ஆக்ஷன் திரில்லர் படமாக இருந்தாலும் இப்பாடலுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
ஒரு வாரம் படப்பிடிப்புஇப்பாடலுக்காக ஒத்திகை முடிந்த பின்னர் கிட்டத்தட்ட ஒரு வாரம் இப்பாடல் சென்னையில் செட் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் வந்த தகவலின் படி இப்பாடலில் விஜய்யுடன் இணைந்து பிரபல நடிகை மடோனா செபாஸ்டியன் நடனமாடியுள்ளார். என்னதான் இதைப்பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட இத்தகவல் உறுதியாகியுள்ளது. இதையடுத்து தற்போது விஜய் இப்பாடலில் ஆடி முடித்துவிட்டு இரண்டு நாட்கள் பிரேக் எடுத்துள்ளாராம். ஆயிரக்கணக்கான நடனக்கலைஞர்கள் மற்றும் திரைபிரபலங்கள் சேர்ந்து ஆடியுள்ள இப்பாடல் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் பாடலாக இருக்கும் என்பது கோலிவுட் வட்டாரத்தின் கணிப்பாக இருக்கின்றது
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாடல்இந்நிலையில் இப்பாடலை பற்றி சமீபத்தில் வந்த தகவல் ஒன்று மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதாவது இப்பாடல் பிளாஷ்பாக் போர்ஷனில் வரும் என்றும், இதில் விஜய் – அர்ஜுன் – மடோனா செபாஸ்டியன் – மன்சூர் அலி கான் ஆகியோர் நடனமாட , சஞ்சய் தத் தன் ஆட்களுடன் கெத்தாக நடந்து வருவதைப்போல இப்பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்நிலையில் லியோ படத்தில் விஜய்யின் தந்தையாக சஞ்சய் தத் நடிப்பதாகவும், விஜய்யின் உயிர் நண்பனாக அர்ஜுன் நடிப்பதாகவும் தகவல்கள் வந்தது. மேலும் அர்ஜுன் நண்பனாக இருந்து பின்பு வில்லனாக மாறுவதாக கதையம்சம் இருக்கும் எனவும் பேசப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது