சென்னை :அர்னவ் ரௌடிகளுடன் வீட்டுக்கு வந்து என் குழந்தையை கொல்லப்பாத்தாரு என்று நடிகை திவ்யா ஸ்ரீதர் மீடியா முன் கதறி அழுதார்.
செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ், செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு தான் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்த, அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை கூறி தன்னை துன்புறுத்தியதாக புகார் அளித்ததை அடுத்து அர்னவ் கைது செய்யப்பட்டார்.
குழந்தை பிறந்தது: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அர்னவ் ஜாமினில் வெளியில் வந்த பின்னரும் கர்ப்பமாக இருந்த திவ்யாவை அர்னவ் கண்டுகொள்ளாமல் மீண்டும் சீரியலில் நடிக்கத் தொடங்கினார். இதையடுத்து, இரண்டு மாதத்திற்கு முன் திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது குழந்தையுடன் மீண்டும் சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.
ஆதாரத்தை வெளியிட்டார்: இதையடுத்து, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை திவ்யா ஸ்ரீதர் , அர்னவ் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார். அவர்கள் அனைவரும் எனக்கு போன் செய்தும், இன்ஸ்டாகிராம் மூலமும் பல ரகசியங்களை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதை நான் வெளியிடக் காரணம் இனி யாரையும் அர்னவ் ஏமாற்றக்கூடாது என்று கூறி ஆதாரங்களை வெளியிட்டார்.
ஈஸ்வருடன் தொடர்பு: திவ்யா ஆதாரத்தை வெளியிட்டதால் கடுப்பான அர்னவ் இன்ஸ்டா நேரலையில் வந்து,திவ்யாவிற்கும் சீரியல் நடிகர் ஈஸ்வருக்கும் தொடர்பு இருந்ததற்கான சில ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டார். மேலும், திவ்யா என்னோடு 15 நாட்களும்,அவரது கணவரோடு ஊரில் 15 நாட்களும் வாழ்ந்து கொண்டு இருந்தார். எங்களது திருமணத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு தான் அவர் விவாகரத்தே பெற்றார். இதற்கு பெயர் என்ன என்று கேட்டார்.
வாக்குவாதம்: இந்நிலையில் நடிகர் அர்ணவ், நேற்று தனது வழக்கறிஞர்களுடன் திருவேற்காட்டில் உள்ள நடிகை திவ்யாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர்களை உள்ளே விட திவ்யா மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காவல் நிலையத்தில் புகார்: திவ்யா இருக்கும் வீடு தனது பெயரில் இருப்பதாகவும், திவ்யா ஸ்ரீதர் அத்துமீறி இங்கே தங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார். அதே சமயம் அர்னவ் நிபந்தனை ஜாமீனில் இருப்பதால் இந்த வீட்டிற்கு வரக்கூடாது என்று திவ்யா கூறியதாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இது குறித்து இவரும் காவல் நிலையம் வந்து புகார் அளித்துவிட்டு தங்களிடம் உள்ள ஆதாரங்களை சமர்பிக்குமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ரௌடியுடன் வந்தார்: அதையடுத்து,செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா அர்னவ் 13 ரௌடிகளுடன் வந்து வீட்டு கதவை தட்டினார். நான் அவரை வீட்டிற்குள் அனுமதிக்காததால், இது என் வீடு என்று கதவை வேகமாக தள்ளினார்கள். நான் உடனே கதவை மூடிவிட்டு என்னுடைய வழக்கறிஞரை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை சொன்னேன். காவல்துறைக்கு தகவல் தெரிவித்தேன்.
கதறி அழுத திவ்யா: அர்னவால் எந்த பெண்ணும் ஏமாறக்கூடாது என்று தான் ஆடியோவை வெளியிட்டேனே தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனால் இப்போது அவர் என் வீட்டுக்கே வந்து என்று குழந்தையை கொல்லப்பாக்கிறார். இது அவர் வீடு என்பதால், அதை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டுகிறார் என்று கதறி அழுதபடி பேசினார்.