ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் – Hero HF Deluxe Price, Mileage, Images

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பட்ஜெட் விலை 2023 ஆம் ஆண்டிற்கான பைக் மாடலான எச்எஃப் டீலக்ஸ் முக்கிய சிறப்புகள், மைலேஜ், நிறங்கள், மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

2023 Hero HF Deluxe

பட்ஜெட் விலையில் சிறந்த மைலேஜ் வழங்கும் மோட்டார்சைக்கிள் ஹீரோ மோட்டோகார்ப் எச்எஃப் டீலக்ஸ்  மாடலாகும். முந்தைய மாடலை விட சிறப்பான மேம்பாடுகளை பெற்றதாக வந்துள்ள பைக்கில் புதிய கேன்வாஸ் கருப்பு நிறத்தை கொண்டுள்ளது.

சமீபத்திய OBD-2 மற்றும் E20 மேம்பாடுகளை பெற்ற 97.2cc ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக், சிங்கிள் சிலிண்டர் ‘XSens டெக்னாலஜி’ கொண்ட ப்ரோகிராம் செய்யப்பட்ட ஃப்யூயல் இன்ஜெக்ஷன் என்ஜின் ஆகும். அதிகபட்சமாக 8000 rpm-ல் 8.02 bhp பவரையும், 6000 rpm-ல் 8.05 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

hf deluxe nexus blue

ஹீரோ XSens ஆனது அதிக எரிபொருள் சேமிப்பு, நீண்ட என்ஜின் ஆயுள், நிலையான சவாரி, சிரமமற்ற ஆக்சிலிரேஷன் மற்றும் குறைந்தபட்ச பராமரிப்பு ஆகிய பல நன்மைகளை வழங்குகிறது.

2023 HF டீலக்ஸ் மாடலின் பரிமாணங்கள் 1965 மிமீ நீளம், 720 மிமீ அகலம் மற்றும் 1045 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 1,235 மிமீ ஆகவும், இருக்கை உயரம் 805 மிமீ. 165 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ்  கொண்டுள்ளது. எச்எஃப் டீலக்ஸ் பைக்கில் 733 மிமீ நீள இருக்கை உள்ளது. இது பில்லியன் மற்றும் ஓட்டுபவர்களுக்கும், அதிக சரக்குகளை எடுத்துச் செல்வதற்கும் ஏற்றதாக அமைகிறது.

ட்யூப்லெர் டபுள் கார்டிள் சேஸ் உடன் முன்புறத்தில் டெலஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் மற்றும் பின்புறத்தில் 2-படி அட்ஜெஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார் கொண்ட ஸ்விங்கார்ம் இடம்பெற்றுள்ளது.

110-112 கிலோ கெர்ப் எடை கொண்டுள்ள பைக்கில் முன்புறத்தில் 2.75 x 18 – 4PR/42P மற்றும் பின்புறத்தில் 2.75 x 18 – 6PR/48P டயர் கொடுக்கப்பட்டு, இருபக்க டயர்களிலும் 130மிமீ டிரம் பிரேக் உடன் இன்ட்கிரேட்டேட் பிரேக்கிங் சிஸ்டம் ஆனது இடம்பெற்றுள்ளது.

hf deluxe

எச்எஃப் டீலக்ஸ் பைக்கில் கிரே நிறத்துடன் பச்சை, டெக்னோ ப்ளூ, கருப்பு நிறத்துடன் பர்பிள், கோல்டு, கிரே உடன் கருப்பு, கேண்டி பிளேசிங் சிவப்பு, கருப்பு உடன் சிவப்பு, நெக்சஸ் கருப்பு மற்றும் கேன்வாஸ் கருப்பு என மொத்தமாக 9 நிறங்களில் கிடைக்கின்றது.

  • HF DELUXE DRUM KICK CAST – ₹ 60858

  • HF DELUXE DRUM SELF CAST – ₹ 67208

  • HF DELUXE GOLD BLACK – ₹ 67978
  • HF DELUXE I3S DRUM SELF CAST – ₹ 68708

(All Prices Ex-Showroom Tamil Nadu)

ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் நுட்பவிரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke 50 mm x 49.5 mm
Displacement (cc) 97.2 cc
Compression ratio 9.9:1
அதிகபட்ச பவர் 7.91 hp at 8000 rpm
அதிகபட்ச டார்க் 8.05 Nm  at 6000 rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் டபுள் கிராடிள்
டிரான்ஸ்மிஷன் கான்ஸ்டென்ட் மெஸ், 4 ஸ்பீடு
கிளட்ச் வெட் மல்டி பிளேட்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் இரட்டை ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிரம் 130 mm
பின்புறம் டிரம் 130 mm (with IBS)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 2.75 x 18 ட்யூப்லெஸ்
பின்புற டயர் 2.75 x 18 ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-3Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப் (with i3S) & கிக்
பரிமாணங்கள்
நீளம் 1965 mm
அகலம் 720 mm
உயரம் 1045 mm
வீல்பேஸ் 1235 mm
இருக்கை உயரம் 805 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 168 mm
எரிபொருள் கொள்ளளவு 9.6 லிட்டர்
எடை (Kerb) 110 Kg (kick) /112 kg (self)

ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் நிறங்கள்

2023 Hero HF Deluxe on-Road Price Tamil Nadu

2023 ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • HF DELUXE DRUM KICK CAST – ₹ 73,467

  • HF DELUXE DRUM SELF CAST – ₹ 80,908

  • HF DELUXE GOLD BLACK – ₹ 81,908
  • HF DELUXE I3S DRUM SELF CAST – ₹ 83,708

(All Prices on-road Tamil Nadu)

  • HF DELUXE DRUM KICK CAST – ₹ 69,858

  • HF DELUXE DRUM SELF CAST – ₹ 76,208

  • HF DELUXE GOLD BLACK – ₹ 77,928
  • HF DELUXE I3S DRUM SELF CAST – ₹ 78,708

(All Prices on-road Puducherry)

2023 Hero HF Deluxe bike

Hero HF Deluxe Rivals

100cc சந்தையில் கிடைக்கின்ற போட்டியாளர்களான பிளாட்டினா 100, ஹீரோ HF 100, ஸ்பிளெண்டர் +, பேஷன் பிளஸ் மற்றும் ஹோண்டா ஷைன் 100 ஆகிய பைக் மாடல்களை எச்எஃப் டீலக்ஸ் எதிர்கொள்ளுகின்றது.

Faq Hero HF Deluxe

ஹீரோ எச்ஃஎப் டீலக்ஸ் என்ஜின் விபரம் ?

97.2cc என்ஜின் 8000 rpm-ல் 8.02 bhp பவரையும், 6000 rpm-ல் 8.05 Nm டார்க் வெளிப்படுத்தும். 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

ஹீரோ எச்ஃஎப் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை ?

ஹீரோ எச்ஃஎப் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 73,100 முதல் ₹ 83,500 வரை கிடைக்கும்.

ஹீரோ எச்ஃஎப் டீலக்ஸ் மைலேஜ் விபரம் ?

ஹீரோ எச்ஃஎப் டீலக்ஸ் மைலேஜ் 70 Kmpl வரை கிடைக்கும்.

2023 HF deluxe Bike Image Gallery

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.