இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து 2023 ஜூன் மாதம் 11 ஆம் திகதி வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக எடுத்துச் சென்ற Pregabalin வகையின் முந்நூறு (300) போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.
இதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய நிறுவனத்தின் கடற்படையினர், மடுகந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட இந்த விசேட நடவடிக்கையில், வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை அவதானித்து சோதனையிட்டனர். அங்கு, குறித்த நபர் விற்பனைக்காக எடுத்துச் சென்ற முந்நூறு (300) Pregabalin வகையின் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையின் மூலம், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் (01) மற்றும் முந்நூறு (300) Pregabalin வகையின் போதை மாத்திரைகள் மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.