125cc சந்தையில் கடுமையான போட்டியை ஏற்படுத்த இரண்டு பைக்குகளை வெளியிடுவதற்கான முயற்சியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் பீரிமியம் பைக் சந்தையில் மிக தீவரமான திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.
ஸ்போர்ட்டிவ் பிரிவில் வரவிருக்கும் 125சிசி மாடல் கிளாமர் பைக்கை விட கூடுதல் ஸ்டைலிங் அம்சங்களை பெற்றதாக விளங்கும். குறிப்பாக ரைடர் 125, பல்சர் 125 பைக்குகளுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் கனெக்ட்டிவிட்டி வசதிகள் பெற்றதாக இருக்கும்.
Hero 125cc Premium Bikes
ஏற்கனவே, ஹீரோ மோட்டோகார்ப் 125cc சந்தையில் விற்பனை செய்து வருகின்ற பட்ஜெட் விலை சூப்பர் ஸ்பிளெண்டர் 125, கிளாமர் 125 மாடலை விட போட்டியாளர்களான எஸ்பி125, பல்சர் 125, ரைடர் 125 பைக்குகள் போன்ற பிரீமியம் மாடல்களை எதிர்கொள்ள கிளாமருக்கு அடுத்தப்படியாக 125cc ஸ்போர்ட் மாடல் வரவுள்ளது.
அடுத்து, கேடிஎம் 125 டியூக் மற்றும் பல்சர் NS125 என இரண்டையும் எதிர்கொள்ளும் வகையிலான ஹீரோ 125cc பிரீமியம் பைக் வரவுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆகவே, இரண்டு 125சிசி மாடல்களை ஹீரோ அடுத்த ஆண்டிற்குள் வெளியிடலாம்.
150cc-450cc வரையில் உள்ள பல்வேறு பிரீமியம் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் 100 முக்கிய நகரங்களில் 2024-க்குள் பிரீமியம் டீலர்களை துவங்க திட்டமிட்டுள்ளது. இந்த டீலர்களில் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.