சென்னை: நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமின் மனைவியும் சின்னத்திரை நடிகையுமான நிஷா கணேஷ் மீண்டும் கர்ப்பமாகி உள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு நடிகர் கணேஷ் வெங்கட்ராமை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் சின்னத்திரை நடிகை நிஷா கணேஷ்.
மீண்டும் தான் கர்ப்பமாக உள்ளதை போட்டோ வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராமில் சந்தோஷமாக அறிவித்துள்ளார் நடிகை நிஷா கணேஷ். அவரது பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சீரியலும் சினிமாவும்: சின்னத்திரை நடிகையாக வலம் வந்த நிஷா கணேஷ் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் அறிமுகமான இவர், வள்ளி, தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி, மகாபாரதம், தலையணை பூக்கள், நெஞ்சம் மறப்பதில்லை, அபி டெய்லர் உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.
அதே போல சினிமாவில் இவன் வேறமாதிரி, நான் சிகப்பு மனிதன், என்ன சத்தம் இந்த நேரம், சென்னை அன்புடன் உங்களை வரவேற்கிறது, வில் அம்பு உள்ளிட்ட சில படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
கணவர் கணேஷ் வெங்கட்ராமன்: அபியும் நானும் படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக நடித்த கணேஷ் வெங்கட்ராமன் தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான இவர், கடந்த 2015ம் ஆண்டு நடிகை நிஷா கிருஷ்ணனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு நிஷா கணேஷாக மாற்றி விட்டார்.
முதல் குழந்தை: திருமணம் ஆன உடனே கர்ப்பமான நிஷா கணேஷுக்கு சமைரா என்கிற அழகான பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில், சமைராவுக்கு குட்டி தம்பியோ அல்லது தங்கையோ கூட விளையாட தற்போது 8 ஆண்டுகள் கழித்து ரெடியாகி விட்டனர் என்கிற சந்தோஷமான செய்தியை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார் நிஷா கணேஷ்.
அடுத்த ரோலர் கோஸ்டர்: முதல் குழந்தைக்காக கர்ப்பகால அவஸ்த்தையை அனுபவித்த நிஷா கணேஷ் அதனை ரோலர் கோஸ்டர் என அழகாக குறிப்பிட்டுள்ளார். தற்போது அடுத்த ரோலர் கோஸ்டருக்கு தயார் என அவர் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
குட்டி கணேஷ் வெங்கட்ராமன் வரப் போகிறாரா? என ரசிகர்கள் அடுத்து ஆண் குழந்தை தான் வரணும் என கமெண்ட் போட்டு வாழ்த்தி வருகின்றனர். எந்த குழந்தையாக இருந்தாலும், தாயும் சேயும் நலமாக ஆரோக்கியத்துடன் வந்தாலே போதும், ஹெல்த்தை நல்லா பார்த்துக்கோங்க நிஷா என்றும் ரசிகர்கள் அன்பு மழை பொழிந்து வருகின்றனர்.