Robo Shankar – தினமும் அஜித் அழுவார்.. அதுக்கு மட்டும் நோ சொல்லிவிடுவார்.. சீக்ரெட் பகிர்ந்த ரோபோ ஷங்கர்

சென்னை: Robo Shankar (ரோபோ ஷங்கர்) நடிகர் ரோபோ ஷங்கர் அஜித்குமார் பற்றிய சில ரகசியங்களை பகிர்ந்திருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் பலரையும் கவர்ந்தவர் ரோபோ ஷங்கர். விஜயகாந்த் போல் அச்சு அசலாக உடல்மொழியையும், மிமிக்ரியையும் கொடுத்து அதகளமும் செய்தார். சின்னத்திரையில் ஜொலித்தால் வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கேற்ப திரைப்படங்களிலும் அறிமுகமானார் ரோபோ ஷங்கர்.

குவிந்த பட வாய்ப்புகள்: அதன்படி தனுஷுடன் மாரி, எழில் இயக்கத்தில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும் தொடர்ந்து பல படங்களில் நடித்த ரோபோ ஷங்கர் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்தார். சின்னத்திரை போலவே வெள்ளித்திரையிலும் ரோபோ ஷங்கர் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.

பார்த்திபன் Vs ரோபோ: இந்தச் சூழலில் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பார்த்திபனும், ஏ.ஆர்.ரஹ்மானும் அமர்ந்திருந்தபோது பார்த்திபனின் மைக் வேலை செய்யாமல் போக உடனடியாக மேடையில் இருந்தவாறு ரோபோ ஷங்கரை நோக்கி மைக்கை வீசியெறிந்து கடிந்துகொண்டார் பார்த்திபன். இந்தச் சம்பவம் அந்த சமயத்தில் சர்ச்சையாகி பிறகு சரியானது.

உடல்நலக்குறைவு: ரோபோ ஷங்கர் நிறைய படங்களில் கமிட்டாகிவந்த சூழலில் திடீரென அவரது உடல் எடை ரொம்பவே சரிந்தது. ஆஜானுபாகுவாக இருந்த ரோபோ ஷங்கர் உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாபமாக காட்சியளித்தார். அவரை பார்த்த பலரும் ரோபோ ஷங்கருக்கு என்னாச்சு என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கினார். மேலும் ரோபோ ஷங்கரின் உடல்நிலை மோசமானதற்கு குடிதான் காரணம் என்று பலர் பேசினர்.

என்ன காரணம்?: இந்தச் சூழலில் உடல்நலம் தேறிய ரோபோ ஷங்கர் தனக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டது. இது எல்லோருக்கும் வரக்கூடியதுதான் என ஓபனாக பேசினார் ரோபோ. இந்நிலையில் அவர் அஜித் குறித்து பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், ஒரு சிலர் படப்பிடிப்பை முடித்துவிட்டு டூருக்கு செல்வார்கள்.அஜித்தோ ஆபரேஷன் தியேட்டருக்கு போவார். மூட்டில் பல வலிகள் இருக்கிறது அவருக்கு. அந்த வலியுடனே அடிச்சு தூக்கு பாடலுக்கு ஆடினார்.

அழுவார்: அந்தப் பாடலின் ஷூட்டிங் முடிந்த பிறகு தனியாக ஒரு இடத்துக்கு சென்று கத்தி அழுவார். பிறகு ஷாட்டுக்கு ரெடி என்று சொல்லிவிட்டு நடிக்க ஆரம்பித்துவிடுவார். ஷூட்டிங் முடிந்துபோகும்போது எல்லா டெக்னீஷியன்களுக்கும் ஏதோ ஒன்றை கொடுத்து அனுப்புவார். அதேபோல் பிரியாணியும் சமைத்துப்போடுவார். சமைப்பதோடு மட்டுமின்றி அருகில் பரிமாறவும் செய்வார். அதை வீடியோ எடுக்கலாமா என கேட்டால் நோ சொல்லிவிடுவார். ஒருமுறை அவரிடம், சார் நீங்கள் எனக்கு பரிமாறினீர்கள் என சொன்னாலும் ஒரு பயலும் நம்பமாட்டான் என்றேன். உடனே அவர் விழுந்து விழுந்து சிரித்துவிட்டார்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.