சவப்பெட்டியில் 4 மணிநேரத்திற்கு பின் உயிருடன் எழுந்த மூதாட்டி! திகைத்துப்போன குடும்பத்தினர்


இறந்ததாக அறிவிக்கப்பட்ட 76 வயது மூதாட்டி, சவப்பெட்டியில் நான்கு மணிநேரம் உயிருடன் இருந்தது ஈக்குவடாரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

76 வயது மூதாட்டி

ஈக்குவடார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பெல்லா மொண்டோயா எனும் 76 வயது மூதாட்டி அனுமதிக்கப்பட்டார்.

இதயம் தொடர்பான பிரச்சனைகள் அவருக்கு இருந்த நிலையில், உடல்நலக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

அதன் பின்னர் சிகிச்சையில் இருந்த பெல்லா 12 மணியளவில் பக்கவாதம் ஏற்பட்டு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சவப்பெட்டியில் உயிருடன் இருந்த மூதாட்டி

இதனையடுத்து அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு இறுதிச்சடங்கில் ஆடைகளை மாற்ற சவப்பெட்டி திறக்கப்பட்டது.

அப்போது பெல்லாவின் கை அசைவதையும், கண்களைத் திறப்பதையும் பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். சுமார் 4 மணிநேரம் அவர் சவப்பெட்டியில் இருந்தததாக கூறப்படுகிறது.

சவப்பெட்டியில் 4 மணிநேரத்திற்கு பின் உயிருடன் எழுந்த மூதாட்டி! திகைத்துப்போன குடும்பத்தினர் | Woman Come Back Life From Coffin Shocking Ecuador

தீவிர சிகிச்சை

பின்னர் அவசர உதவி எண்ணான 911க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சில நிமிடங்களில் துணை மருத்துவர்கள் வந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டார்.

மூதாட்டி பெல்லா மொண்டோயாவின் மகன் கில்பர்ட் பால்பெரன், இச்சம்பவம் தொடர்பில் மருத்துவமனையின் அலட்சியத்தை குற்றம்சாட்டும் வகையில் உள்ளூர் வழக்குரைஞர் அலுவலகத்தில் அறிக்கையை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.