மேம்பாலம் கட்ட இடம் கொடுத்த டி.ராஜேந்தர் : ரூ.8 கோடி இழப்பீடு
டி.ராஜேந்தருக்கு வேலூரில் இரண்டு தியேட்டர்கள் உள்ளது. தற்போது வேலூரில் கால்நடை மருத்துமனை அருகே உள்ள ரயில்வே கேட்டால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. இந்த மேம்பாலம் டி.ராஜேந்தரின் தியேட்டர் வழியாக செல்கிறது. இதற்காக அவர் நிலத்தில் இருந்து 527 சதுரமீட்டர் நிலம் அரசுக்கு தேவைப்பட்டது. இதற்கான நோட்டீஸ் டி.ராஜேந்தருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று வேலூர் சென்ற டி.ராஜேந்தர் பத்திரபதிவு அலுவலத்திற்கு சென்று தனது 527 சதுர மீட்டர் நிலத்தை பொதுமக்கள் நலனுக்காக மேம்பாலம் கட்ட வழங்கினார். இதற்காக அரசு அவருக்கு 8 கோடியே 15 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்குகிறது.