மிஷன் இம்பாசிபிள் 7ம் பாகம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ்
ஹாலிவுட் ஸ்டார் டாம் குரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள் படம் 1996ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து 2000, 2006, 2011, 2015 ஆண்டுகளில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தது. கடைசியாக 2018ம் ஆண்டு மிஷன் 'இம்பாசிபிள் : பால்அவுட்' என்ற பெயரில் இதன் 6ம் பாகம் வெளிவந்தது. தற்போது இதன் தொடர்ச்சியாக மிஷன் 'இம்பாசிபிள் : டெட் ராக்கிங்' என்ற பெயரில் உருவாகி உள்ளது.
இந்த 7வது பாகம் வருகிற ஜூலை 12ம் தேதி உலகம் முழுவதும் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அதாவது டெட் ராக்கிங் படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு ஜூன் 28ம் தேதி வெளிவருகிறது. இந்த இரண்டு பாகத்தையும் டாம்குரூஸ் தயாரித்துள்ளார். இதில் டாம் குரூஸ் உடன் ஹெய்லே அத்வல், விங் ரஹம்ஸ், சிமோன் பெக், ரெபேக்கா பர்குசன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கிறிஸ்டோபர் மெக்குரியோ இயக்கி உள்ளார். படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி உள்ளது.