பிரசத்தி பெற்ற டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை FAME-II மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து பெரும்பாலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையும் ரூ.30,000 வரை உயர்ந்தது.
ஓலா S1 புரோ, ஹீரோ விடா வி1, ஏதெர் 450X, சிம்பிள் ஒன் மற்றும் பஜாஜ் சேட்டக் உள்ளிட்ட பல்வேறு ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளுகின்ற ஐக்யூப் எலக்ட்ரிக் விலை அதிகபட்சமாக ரூ.22,000 வரை உயர்த்தப்பட்டது.
TVS iQube on-Road Price
ஃபேம் திட்டத்தின் மானியம் ஒரு Kwh பேட்டரிக்கு ரூ.10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இது ஒரு Kwh பேட்டரிக்கு 15,000 ஆக இருந்தது.
ஐக்யூப் மாடலில் தற்பொழுது iqube ஸ்கூட்டரின் பேஸ் வேரியண்ட் மற்றும் S வேரியண்டில் 3.04Kwh பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஈக்கோ மோடில் 100 கிமீ வரம்பை வழங்குகிறது.
நிகழ்நேரத்தில் இரண்டு வேரியண்டுளும் 75 முதல் 80 Km ரேஞ்சு வழங்கும் நிலையில் பவர் மோடில் அதிகபட்சமாக 55-60Km வழங்குகின்றது. இந்த மாடல்களின் டாப் ஸ்பீடு 78Km/hr ஆகும். இந்த இரு மாடல்களிலும் 650 வாட்ஸ் சார்ஜர் கொண்டு 0-80 % சார்ஜ் செய்ய 4 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகும்.
iQube Specification | iQube | iQube S |
Battery pack | 3.04 kWh | 3.04 kWh |
Top Speed | 78 km/h | 78 km/h |
Range (IDC claimed) | 100 km | 100 km |
Real Driving Range | 75 km | 80 km |
Riding modes | Eco, Power | Eco, Power |
புதிய டிவிஎஸ் ஐக்யூப் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை பட்டியல்
TVS iQube – ₹ 1,41,248
TVS iQube S – ₹ 1,56,355