பிரீத்தியை சீக்கிரம் திருமணம் செய்ய காரணம் இதுதான் : மனம் திறக்கும் கிஷோர்

பசங்க படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கிஷோர், சீரியல் நடிகை ப்ரீத்தியை திருமணம் செய்து கொண்டார். இதில் பிரீத்தி, கிஷோரை விட நான்கு வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இருவரும் திடீரென திருமணம் செய்து கொண்டனர். இந்த அவசர திருமணம் எதற்காக என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் கிஷோர் – பிரீத்தி இருவரும் இதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளனர்.

பிரீத்தியின் தந்தைக்கு கடந்த 4 வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் மகளின் திருமணத்தை சீக்கிரம் பார்ப்பதற்கு ஆசைப்பட்டுள்ளார். அவரின் விருப்பத்தை நிறைவேற்றவே அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டதாகவும், இல்லையேல் தனது 31வது வயதில் தான் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கிஷோர் விளக்கமளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.