சென்னை: நடிகை மாளவிகா மோகனன் ஜீப்ரா கிராஸிங் போல கருப்பு வெள்ளை கோடு போட்ட உடையை அணிந்து கொண்டு சைடு போஸில் எக்ஸ்ட்ரா கிளாமரையும் காட்டி உள்ளார்.
கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் ஹீரோயினாக நடிக்க சிலம்பாட்டம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மாஸ்டர் ஹீரோயின்: ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன் விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
மாஸ்டர் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கொடுத்த ரியாக்ஷனை வைத்து ஏகப்பட்ட மீம்கள் அவரை சும்மா வச்சு செய்தன. தனுஷ் உடன் இணைந்து மாறன் படத்தில் நடித்த நிலையிலும் மாளவிகா மோகனை சுற்றி ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் பறந்தன.
நயன்தாராவுடன் மோதல்: நடிகை நயன்தாராவை விமர்சித்து மாளவிகா மோகனன் பேசி விட்டார் என்றும் அதற்கு பேட்டி ஒன்றில் நயன்தாரா பதிலடி கொடுத்தார் என்றும் பரபரப்பு கிளம்பின.
நயன்தாராவின் மேக்கப் குறித்து மாளவிகா மோகனன் கலாய்த்ததாக வெளியான தகவலை அடுத்து லேடி சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் மாளவிகா மோகனனை திட்டித் தீர்த்தனர்.
கவர்ச்சியால் கரெக்ட் செய்து விட்டார்: ஆனால், சோஷியல் மீடியா ரசிகர்களை தனது பிகினி போட்டோக்களை போட்டு கவர்ச்சியாலே கரெக்ட் செய்து விட்டார் மாளவிகா மோகனன் என்றும் அவரது பிகினி போட்டோக்களுக்கு கீழ் கமெண்ட்டுகள் குவிந்தன.
சரியாக இதுவரை தமிழ் சினிமாவில் தனது நடிப்புத் திறமையை மாளவிகா மோகனன் வெளிப்படுத்தவில்லை என்கிற விமர்சனத்துக்கு தங்கலான் படத்தின் மூலம் பதிலடி கொடுக்க காத்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
சைடு போஸில் செம ஹாட்: இந்நிலையில், தற்போது நடிகை மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் படு ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். ஜீப்ரா கிராஸிங் போல கருப்பு வெள்ளை கோடுகளான கவர்ச்சி உடையில் சைடு போஸில் சொக்க வைக்கும் அழகில் ரசிகர்களை மயக்கி உள்ளார்.
அதை பார்த்த ரசிகர்கள் ஒரு செகண்ட் தீபிகா படுகோன் என நினைச்சிட்டோம் என்றும் ஃபயருங்க, செம ஹாட், பேரழகி என வர்ணித்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
நாங்க அதை பார்த்துட்டோம்: சில நெட்டிசன்கள் நாங்க அதை பார்த்துட்டோம் என்றும் இன்னும் மோசமாக மாளவிகா மோகனனை கேவலப்படுத்தும் விதமாகவும் கமெண்ட்டுகளை அவரது இன்ஸ்டா போஸ்ட்டுக்கு கீழ் பதிவிட்டு வருகின்றனர்.