பேஸ்புக் லைவில் தற்கொலை முயற்சி: பிரபல நடிகரின் செயலால் பரபரப்பு.!

தி கபில் சர்மா ஷோ மற்றும் வாக்லே கி துனியா போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் தீர்த்தானந்த ராவ். இவர் ‘காலா’ பட வில்லன் நடிகர் நானா படேகர் போல் அருமையாக மிமிக்ரி செய்வார். இதனாலே ரசிகர்கள் இவரை ஜுனியர் நானா படேகர் என அழைப்பார்கள்.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இவர் பேஸ்புக் லைவில் ரசிகர்களுடன் பேசி கொண்டிருந்த போது, திடீரென ஆவேசத்துடன் என்னுடைய இந்த நிலைமைக்கு காரணம் ஒரு பெண் தான். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அந்த பெண் தான் பொறுப்பு. அவர் என்னை மிரட்டி ரூ 3 முதல் 4 லட்சம் வரை பணம் பறித்துள்ளதாகவும், அவரால் தற்போது நான் நிர்கதியாய் நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும், அந்த பெண் தன்னை பிளாக்மெயில் செய்வதாகவும், தன்னை பற்றி அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும், அதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. அந்த பெண் தனக்கு அறிமுகமாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு பேசி கொண்டிருக்கும் போதே தனது பக்கத்திலிருந்த பாட்டிலில் இருந்த திரவத்தை கிளாசில் ஊற்றி குடித்துள்ளார்.

Kamal Haasan: ‘விக்ரம்’ பட பாணியில் உருவாகும் KH 233: பெருசா பிளான் போடும் ஆண்டவர்.!

இதனை பார்த்து பதறி போன ரசிகர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்கள் தீர்த்தானந்த ராவை நினைவிழந்த நிலையில் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. பேஸ்புக் லைவில் பேசிக்கொண்டிருக்கும் போதே, தீர்த்தானந்த ராவ் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பாலிவுட் சினிமாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Vidaamuyarchi: வேகமெடுக்கும் அஜித்தின் ‘விடாமுயற்சி’: லைகாவின் வேறலெவல் திட்டம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.