குஜரத்தில் இன்று கரையை கடக்கும் `பிபர்ஜாய்’
அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல், குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் வசிக்கும் 50,000 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். கரையைக் கடக்கும் போது அதன் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் ஆக இருக்கும் என்றும் அதிகபட்சமாக 150 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன. பாகிஸ்தானிலும் இந்த பிபர்ஜாய் புயல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.