சென்னை: விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் லியோ.
7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது.
இந்நிலையில், லியோ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில், விஜய் ரெஸ்ட் எடுக்க கேரவன் உள்ளே போகாமல் சில சம்பவங்களை செய்து வருகிறாராம்.
லியோ ஷூட்டிங் ஸ்பாட் சம்பவங்கள்:விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டருக்குப் பின்னர் விஜய் – லோகேஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் லியோ படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும், இந்தப் படம் லோகேஷின் யுனிவர்ஸில் உருவாகி வருவதும் அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது.
விஜய் வாரிசு படத்தில் நடித்து வரும்போதே லியோ கூட்டணி உறுதியாகிவிட்டது. இதனால் வாரிசு ரிலீஸான உடனே லியோ அப்டேட்டும் வெளியானது. அதுமட்டும் இல்லாமல் உடனடியாக காஷ்மீர் சென்ற படக்குழு முதற்கட்ட படப்பிடிப்பையும் முடித்துவிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த ஷெட்யூலில் சில ஆக்ஷன் காட்சிகளையும் பிரம்மாண்டமான பாடல் காட்சியையும் படமாக்கி வருகிறார் லோகேஷ்.
இந்தப் பாடலில் விஜய்யுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், அனிருத் உட்பட 2000 டான்ஸர்கள் நடனமாடுகிறார்களாம். டான்ஸ் மாஸ்டர் தினேஷ் இப்பாடலுக்கு கோரியோகிராபி செய்வதும் ஏற்கனவே தெரிந்தது தான். வழக்கமாக படப்பிடிப்பில் ஓய்வு கிடைத்தால் நேராக கேரவன் சென்று ரெஸ்ட் எடுப்பது தான் விஜய்யின் வழக்கம். விஜய் மட்டும் இல்லாமல் டாப் ஹீரோக்கள் அனைவரும் கேரவனில் தஞ்சமடைந்துவிடுவார்கள்.
ஆனால், விஜய் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவன் பக்கம் செல்வதே கிடையாதாம். விட்டுப் போன சொந்தங்கள் எல்லாம் கல்யாண வீட்டில் ஒன்றுகூடியதை போல இருக்கிறதாம் லியோ ஷூட்டிங் ஸ்பாட். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் விக்ரமன் படத்தில் வரும் கூட்டுக் குடும்பம் போல திரும்பிய பக்கமெல்லாம் பிரபலமான நடிகர்களாக தான் இருக்கின்றனர். இதனால், லியோ ஷூட்டிங் ஸ்பாட் காமெடி திருவிழாவாக மாறிவிட்டதாம்.
பொது இடங்களில் விஜய் சைலண்டாக இருந்தாலும் தன்னுடன் நடிப்பவர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பாராம். லியோ படப்பிடிப்புத் தளத்தில் இன்னும் ஒருபடி மேலேபோய் அத்தனை பேரையும் பங்கமாக கலாய்த்து வருகிறாராம். அதிலும் முக்கியமாக விஜய்யுடன் மன்சூர் அலிகானும் சேர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டை ‘கலக்கப்போவது யாரு’ ரேஞ்சுக்கு மாற்றிவிட்டாராம் மனுஷன். இதனால் விஜய் – மன்சூர் அலிகான் இருவரும் சேர்ந்து இருந்தால் அவர்கள் பக்கம் போகவே மற்றவர்கள் பயப்படுகிறார்களாம்.