
விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் பூஜையுடன் துவக்கம்
நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது குஷி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மீண்டும் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதுவும் காதல் கதையில் தான் தயாராகிறது. இவருக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூர் நடிக்கிறார். முதல் முறையாக விஜய் தேவரகொண்டா உடன் மிருணாள் நடிக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். கோபி சுந்தர் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் இன்று இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் படக்குழுவினர்கள் உடன் பத்திரிகையாளர் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் நடைபெற்றது. தற்போது படத்தின் பிரீ-புரொடக்ஷன் பணிகள் நடக்கின்றன. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.