நேற்று தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய அனுமதி கோரியும் செந்தில் பாலாஜியை 18 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அமலாக்கத் துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்ய்யப்பட்டன. இந்நிலையில், இந்த மனுக்களை நீதிபதி எஸ்.அல்லி இன்று விசாரணை செய்ய இருக்கிறார்.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கான பாதுகாப்பு பொறுப்பை புழல் சிறைத்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். அந்த வகையில் சிறை துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர் உட்பட 10 போலீசார் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெரும் வார்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண் சிறை கைதிகளுக்கு உள்ள விதிமுறைகள் அனைத்தும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்வையாளர்கள் பார்க்க புயல் செயல் துறை அதிகாரிகள் ஒப்புதலோடு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.