யாழ்ப்பாண புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி

மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ விஎஸடவி யுஎஸ்பி என்டியு பீஎஸ்சி அவர்கள், திங்கட்கிழமை (12) மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையக புதிய தளபதியாக பதவியேற்றார்.

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் நுழைவாயிலில், இலங்கை இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் ‘மகா சங்க’ உறுப்பினர்களின் ‘செத் பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில், அவர் தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மத தலைவர்களும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர். மாங்கன்று நடுதல், குழு படம் எடுத்தல் என்பவற்றிலும் அவர் கலந்துக் கொண்டார்.

பின்னர் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ விஎஸ்டவி யுஎஸ்பி என்டியு பீஎஸ்சி அவர்கள் பலாலி போர்வீரர்கள் நினைவுத்தூபியில் வீரமரணம் அடைந்த போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

51, 52 மற்றும் 55 வது காலாட் படைபிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.