சென்னை: இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயரோடு வலம் வந்துக் கொண்டிருக்கிறார். கமல், விஜய், ரஜினி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை இயக்கியுள்ளார்.
தற்போது கமலின் இந்தியன் 2 படத்தையும் ராம்சரணின் கேம் சேஞ்சர் போன்ற படங்களை தற்போது ஒரே நேரத்தில் இயக்கிவருகிறார்.
இதில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இயக்குநர் ஷங்கரை இயக்கவிரும்பும் எஸ்ஜே சூர்யா: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2. இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், விரைவில் சூட்டிங் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்துவரும் நிலையில், விரைவில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். படம் முதல் பாகத்தை விடவும் சிறப்பான வகையில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் சேனாபதி மற்றும் சந்த்ரு என இருவேறு கேரக்டர்களில் கமல் மிரட்டினார். தற்போது இந்தியன் 2 படத்திலும் சேனாபதி கேரக்டரை ஏற்று அவர் நடித்துள்ளார். இந்த கேரக்டருக்காக தினந்தோறும் மூன்று மணிநேரங்கள் மேக்கப்பிற்காக அவர் செலவிடுவதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல ரிமூவ் செய்யவும் 3 மணிநேரங்கள் செலவாகிறதாம். இதனிடையே இந்தப் படத்துடன் ராம் சரணின் கேம் சேஞசர் படத்தையும் இயக்கி வருகிறார் ஷங்கர்.
இந்த இரு படங்களும் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நிலையில், இந்தியன் 2 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படம் மிகப்பெரிய வசூல் சாதனையை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முந்தைய பாகத்தை காட்டிலும் அதிக வசூலையும் இந்தப் படம் செய்யும் என்றும் விமர்சகர்கள் கணித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ராம்சரணின் படத்திலும் இவர்தான் வில்லன்.
எஸ்ஜே சூர்யா நடிப்பில் இரு தினங்களில் பொம்மை படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பேசிய அவர், இயக்குநர் ஷங்கரை ஹீரோவாக வைத்து படமியக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இயக்குநராக அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை வைத்து இவர் படமியக்கியுள்ளார். தொடர்ந்து தன்னுடைய படங்களில் தானே ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில் தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
முன்னணி ஹீரோக்களுடன் வில்லனாகவும் கேரக்டர் ரோல்களிலும் ஹீரோவாகவும் பல கேரக்டர்களில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் எஸ்ஜே சூர்யா. இந்நிலையில் அவர் விரைவில் படமியக்குவார் என்று கூறப்படுகிறது. இயக்குநர் ஷங்கரும் ஹீரோவாகும் ஆசையில்தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவரை முன்னணி இயக்குநராக மாற்றிவிட்டது. அவர் தனது படங்களில் சிறிய சிறிய என்ட்ரிக்களை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.