தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த வாரம் புயலாக மாறியது. ‘பிபர்ஜாய்’ என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து ஒவ்வொரு நொடியும் தீவிரமடைந்து வந்தது. கடந்த 11 ஆம் தேதி பிபர்ஜாய் புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்தது. இந்நிலையில் இந்த புயல் புதன் கிழமை பாகிஸ்தானுக்கும் குஜராத்துக்கும் இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டடது.
ஆனால் புயல் கரை நெருங்கும் வேகம் குறைந்ததால், வியாழக்கிழமை அதாவது இன்று மாலை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டது. அதன்படி இன்று மாலை குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுவில் சயனைடு எப்படி? அதிர்ச்சியா இருக்கு… தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் நறுக்!
பிபர்ஜாய் புயலை முன்னிட்டு இந்தியாவின் அரபிக் கடலை ஒட்டிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குஜராத் மாநிலத்திலும் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. மழை காரணமாக குஜராத் கடலோர பகுதிகளில் வசிக்கும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மும்பை உட்பட மகாராஷ்டிரா மாநிலத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பிபர்ஜாய் புயல் கரையை நெருங்கி வருவதால் குஜராத் மற்றும் மும்பை கடற்பகுதி கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பல அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பி வருகின்றன. புயல் கரையை கடக்கும் போது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பாஜக தென் நாட்டில் காலூன்ற வாய்ப்பு கொடுத்ததே ஜெயலலிதாதான்… அண்ணாமலையை விளாசிய டிடிவி தினகரன்!
பிபர்ஜாய் புயலால் குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், ராஜ்கோட், மொர்பி, ஜுனாகாத், சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் பகுதிகளில் அதிதீவிர மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. பிபர்ஜாய் புயலை எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை குழு உட்பட முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் புயல் கரையை கடக்கும் பாதையில் செல்லும் 69 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.