சென்னை: 12பி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஷாம், ஒருகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.
முதல் படத்திலேயே சிம்ரன், ஜோதிகா என இரு டாப் ஹீரோயின்ஸ் உடன் நடித்து மாஸ் காட்டியிருந்தார்.
ஆனால், தற்போது ஃபீல்ட் அவுட் ஆகிவிட்ட ஷாம், சமீபத்தில் வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை மீனா குறித்து ஷாம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
மீனா குறித்து மனம் திறந்த ஷாம்
மாடலிங், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்த ஷாம், 12பி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிம்ரன், ஜோதிகா இருவருக்கும் நாயகனாக நடித்து கோலிவுட்டையே அதிர வைத்தவர் ஷாம். ஆனாலும், அடுத்தடுத்து லேசா லேசா, உள்ளம் கேட்குமே, இயற்கை போன்ற சில படங்கள் மட்டுமே ஷாம் கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தன.
அதன்பின்னர் தமிழ், தெலுங்கில் அவ்வப்போது நடித்து வந்த ஷாம், இறுதியாக வாரிசு படத்தில் கம்பேக் கொடுத்தார். இந்தப் படத்தில் விஜய்க்கு அண்ணனாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார். அதன்பின்னர் மீண்டும் ஷாமிற்கு பட வாய்ப்புகள் தேடிச் செல்வதாக சொல்லப்படுகிறது. அதனால், பல சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன்படி ‘நீ போதும்’ என்ற பாடல் வெளியீட்டு விழாவில் ஷாம் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஷாம் உடன் மீனா, நடிகர் பரத் ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது பேசிய ஷாம், திரைத்துறையில் தனது அனுபவங்கள் குறித்து மனம் திறந்தார். அதுமட்டும் இல்லாமல் இந்நிகழ்ச்சிக்கு வர நடிகை மீனா தான் காரணம் எனவும் குறிப்பிட்டார். அவரின் அழகை ரசிக்கவே வந்தேன் என ஷாம் சொன்னதும், அதனை கேட்டு வெட்கத்தில் வாய்மூடி சிரித்தார் கோலிவுட் கண்ணழகி மீனா.
மேலும், மீனாவுடன் நடிக்க முடியாமல் போனது பற்றியும் ஷாம் பேசினார். மீனாவுடன் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தாலும் அது நடக்காமல் போனது. ஆனால், அவருடன் ஒரு நிகழ்ச்சிக்காக நடனம் ஆடியது நினைவில் இருப்பதாக கூறினார். அதற்காக அவருடன் 6 மாதங்கள் ட்ராவல் செய்துள்ளதாக கூறினார். அப்போது டான்ஸ் பற்றியும் நடிப்பு குறித்தும் பல விஷயங்களை தனக்கு கற்றுக்கொடுத்ததாக தெரிவித்தார்.
அதேபோல், மீனாவின் சாதனையை பாராட்டி அவருக்கு ‘மீனா 40’ என்ற நிகழ்ச்சி நடத்தியது சிறப்பானது என பாராட்டினார். மேலும், மீனாவிடம் ஒருமுறை விளையாட்டாக பேசியதற்கு டென்ஷனாகிட்டாங்க. ஆனால், அதுபற்றியெல்லாம் அவங்க மனதில் வைத்துக்கொள்வதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக நடிகர் பரத் குறித்து பேசிய ஷாம், “பரத் அடிக்கடி கனவில் வந்து ஒர்க்அவுட் பண்ண கூப்பிடுவதாகவும், நாங்கள் எல்லாரும் ஜிம் மேட்ஸ்” எனவும் ஜாலியாக கூறினார். ஷாமின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.