NIA Releases Photos Of Suspects In March Attack On Indian High Commission In London | லண்டனில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் விவகாரம்: குற்றவாளிகள் அடையாளம் கண்டுப்பிடிப்பு: என்ஐஏ தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

லண்டன்: லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில், கடந்த மார்ச் மாதத்தில் தாக்குதல் நடத்தி, இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்களை அடையாளம் கண்டிருப்பதாக தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது.

latest tamil news

காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்கிற்கு ஆதரவாக, கடந்த மார்ச் 19ல், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியத் துாதரகத்திற்குள் புகுந்து, அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், அங்கு கம்பீரமாக பறந்து கொண்டிருந்த நம் நாட்டின் தேசியக் கொடியை போராட்டக்காரர்கள் இறக்கினர். இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

latest tamil news

இதற்கிடையே, அம்ரித்பாலை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து, புதுடில்லி போலீசார் விசாரித்து வந்தனர். இதையடுத்து, என்.ஐ.ஏ.,க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. லண்டனில் உள்ள இந்திய துாதரகத்தில் வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காண்பதற்கு உதவும்படி, பொது மக்களை, என்.ஐ.ஏ., கேட்டிருந்தது.

இந்நிலையில் என்ஐஏ., வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் தாக்குதல் நடத்தி, இந்திய தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்களை அடையாளம் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக வன்முறையில் ஈடுபட்ட 45 பேரின் புகைப்படங்கள் லண்டனில் உள்ள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களைப் பற்றிய தகவல்களைத் தருமாறு இந்தியா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.