Volvo C40 Recharge – வால்வோ C40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் கூபே எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம்

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூபே ஸ்டைல் வால்வோ C40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரானது. முன்பாக விற்பனை செய்யப்படுகின்ற XC40 ரீசார்ஜ் மாடலை அடிப்படையாக கொண்டதாகும்.

C40 ரீசார்ஜ் இந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது. விரைவில், ஆன்லைனில் முன்பதிவுகள் துவங்கப்பட்டு செப்டம்பரில் டெலிவரி தொடங்கும் என தெரிவித்துள்ளது.

Volvo C40 Recharge

விற்பனையில் கிடைக்கின்ற எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரின் தோற்றத்தை பெற்றிருந்தாலும், பின்புறத்தில் கூபே ஸ்டைல் மாடலுக்கு இணையான மாற்றத்தை பெற்றுள்ளது. பின்புறத்தில் நேர்த்தியான எல்இடி டெயில் லைட் அமைப்பு உள்ளது.

முன்பக்கத்தில் தோரின் சுத்தியலை போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தக்கூடிய ஹெட்லேம்ப் உடன் ரன்னிங் பகல்நேர விளக்குகள்; முன் பம்பர் மற்றும் ஹூட் கதவுகளின் விளிம்பு என அனைத்தும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு டூயல்-டோன் 19-இன்ச் அலாய் வீல் உள்ளது.

9.0-இன்ச் போர்ட்ரெய்ட் ஸ்டைல் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏசி வென்ட்கள், டேஷ்போர்டில் மர வேலைப்பாடுகள் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வோல்வோவிடமிருந்து எதிர்பார்ப்பது போலவே சிறப்பாக உள்ளது.

C40 ரீசார்ஜ் மின்சார காரில் நான்கு சக்கர டிரைவ் பெற்று இரண்டு 201 ஹெச்பி எலக்ட்ரிக் மோட்டாரில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆக்சிலில் பொருத்தப்பட்டுள்ளன. அவை இணைந்து அதிகபட்சமாக 408hp பவர் மற்றும் 660 Nm டார்க்கை வழங்குகின்றன. இந்த கார் 0-100 கிமீ வேகத்தை அடைய 4.9 விநாடிகள் தேவைப்படுகின்றது. அதிகபட்சமாக 180 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

78 கிலோவாட்  பேட்டரியிலிருந்து சக்தியை பெறுகின்ற இந்த காரின் வரம்பு 534 கிமீ கிடைக்கும் என WLTP மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளது. 11 கிலோவாட் ஏசி சார்ஜர் அல்லது 150 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யலாம். 150 கிலோவாட் டிசி சார்ஜர் மூலம் சார்ஜிங் செய்யும்போது வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜிங் ஆகும் திறனை பெறும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.