Sexually Assaulted By Powerful Men In Parliament: Australian Lawmaker | பார்லி வளாகத்தில் பாலியல் துன்புறுத்தல்: ஆஸி., பெண் எம்.பி., கண்ணீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சிட்னி: ஆஸ்திரேலிய பார்லிமென்ட் வளாகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பெண் எம்.பி., ஒருவர் புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக லிடியா தோர்ப் என்ற பெண் எம்.பி., நேற்று கூறியதாவது: சக்திவாய்ந்த நபரால் பாலியல் ரீதியான கருத்துகளால் மோசமாக விமர்சனத்திற்கு உள்ளானதுடன், படிக்கட்டில் தள்ளிவிடப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்.

சக எம்.பி., ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், இது தொடர்பாக புகாரை திரும்ப பெற வேண்டும் எனக்கூறி மிரட்டல் விடுத்தார். பெண்கள் பணியாற்ற, இந்த கட்டடம் பாதுகாப்பானதாக இல்லை என கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

இன்று மீண்டும், லிபரல் கட்சியை சேர்ந்த எம்.பி., டேவிட் வேன் என்பவர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக புகார் கூறியிருந்தார்.

இதனை மறுத்த டேவிட் வேன், இந்த குற்றச்சாட்டுகளால் நான் உடைந்து போயிருக்கிறேன். இந்த குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது எனக்கூறினார்.
பெண் எம்.பி.,யின் குற்றச்சாட்டை தொடர்ந்து டேவிட்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.