Asia Cup Cricket in Pakistan, Sri Lanka | பாகிஸ்தான், இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்

துபாய்: பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், மொத்தம் நடைபெற உள்ள 13 போட்டிகளில் 4 போட்டி பாகிஸ்தானிலும், மீதமுள்ள 9 போட்டிகள் இலங்கையிலும் நடக்கும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரில் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெறும். அதில், அதிக புள்ளிகளை பெறும் இரு அணிகள் பைனலில் மோதும். வரும் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.