ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விஜய் தற்போது லியோ படப்பிடிப்பில் பிசியாக நடித்து வருகின்றார். கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் தான் லியோ படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதில் விஜய்யுடன் இணைந்து 2000 நடனக்கலைஞர்கள் நடனமாடியுள்ளனர்.
மேலும் இப்பாடலை விஜய்யே பாடியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. கடந்த ஒரு வாரமாக இப்பாடல் பாடமாக்கப்பட்டதை அடுத்து விரைவில் படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட இருக்கின்றது. இது ஒருபக்கம் இருக்க விஜய் தன் அடுத்த படமான தளபதி 68 படத்தின் அறிவிப்பையும் கடந்த மாதம் வெளியிட்டார்.
லியோவில் இருந்து பிரேக்
இதையடுத்து ஒருபக்கம் தளபதி 68 படவேலைகளையும் கவனித்து வருகின்றார் விஜய். இந்நிலையில் தற்போது லியோ படத்தின் பாடல் காட்சியின் படப்பிடிப்பை முடித்த விஜய் இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்து பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாண்வர்களுக்கு விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
Thalapathy 68: வெங்கட் பிரபுவின் ஐடியா..வேண்டாம் என்ற தளபதி..காரணம் இதுதானாம்..!
இதைப்பற்றி ஆலோசிக்க விஜய் லியோ படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்தார். தற்போது இந்த ஆலோசனை முடிவடைந்துள்ளதாம். இதையடுத்து மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவிற்கு போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கக்கூடாது என விஜய் ஸ்ட்ரிக்ட்டாக உத்தரவு போட்டுள்ளாராம்.
உத்தரவு போட்ட விஜய்
இதையடுத்து விஜய்யின் ரசிகர்கள் சுவர் விளம்பரம் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளனர். விஜய்யின் இந்த முடிவு பொது மக்களால் வரவேற்கப்பட்டு வருகின்றது. போஸ்டர் மற்றும் பேனர் வைத்தால் அது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும் என்பதாலும், வீண் விளம்பரம் செய்வதாக இருக்கும் என்பதாலும் விஜய் இதனை தடுத்து நிறுத்தியுள்ளார். இந்நிலையில் விரைவில் இந்த விழா விஜய்யின் அலுவலகத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் இந்த விழாவை முடித்துவிட்டு விஜய் லியோ படப்பிடிப்பில் மீண்டும் இணையவுள்ளார். மேலும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் ஜூலை மாதம் தளபதி 68 படப்பிடிப்பை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.